சலனப் பாசியின் பசலை.

Spread the love

.
*
மரண மீன்
செதிலசைத்து நீந்துகிறது
நாளங்களில்

மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில்
உடைந்து வாலசைக்கிறது
இதயம் நோக்கி

மௌன நீர்மையில்
வேர்ப் பிடித்து முளைக்கும் சலனப் பாசி
நெளிந்து நெளிந்து கலக்கும் பசலையைத்
தின்று தீர்க்க

வாய் திறந்து திறந்து மூடுகிறது
உயிரின்
நித்திரைத் திரட்டுகள்..

*****
–இளங்கோ

Series Navigationகதையல்ல வரலாறு (தொடர்) 1நிழல் வேர்கள்