சினேகிதனொருவன்

 

சிநேகிதனொருவன் இருக்கிறான் எனக்கு

ஒரு பயனுமற்ற பொறுக்கியென

அனேகர் கூறும்படியான

 

அவ்வப்போது நள்ளிரவுகளில்

பயங்கரமான கனவொன்றைப் போல

உறக்கத்தைச் சிதைத்தபடி

வருவான் அவன் எனதறைக்கு

 

வடையொன்றை, கடலைச் சுருளொன்றை

எனது கையில் திணிக்குமவன்

வரண்ட உதடுகளை விரித்து

குழந்தைப் புன்னகையை எழுப்புவான்

 

உரையாடல்களை உடைக்கும் சொற்களோடு

சிவந்த விழிகளைச் சிறிதாக்கி

புரியாதவற்றை வினவுவான்

எனது தோள்களைப் பிடித்து

பதிலொன்றைக் கேட்டு

இரு விழிகளையும் ஊடுருவுவான்

 

அத்தோடு எனது தோள்மீது

அவனது தலையை வைத்து

கண்ணீர் சிந்துவான்

 

நிறுத்தும்படி கேட்கும்

எனது பேச்சைச் செவிமடுக்காது

ஒரு கணத்தில் இருளில்

புகுந்து காணாமல் போவான்

 

பகல்வேளைகளில் வழியில்

தற்செயலாகப் பார்க்க நேர்கையில்

தெரியாதவனொருவனைப் போல

என்னைத் தாண்டிச் செல்வான்

 

– இஸுரு சாமர சோமவீர

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

 

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -3பாவலர்கள் (கதையே கவிதையாய்)