சுடர் மறந்த அகல்

Spread the love

மாரியாத்தா….

சந்திகால வேளையில், ஓடி சென்று
நெய்வேத்யத்தை கொரித்துக் கொண்டே
சிவனிடம் அன்று நடந்தவைகளை
பகிர தோன்றியது இல்லையோ ?

மகிசாசுரன்களை வதம் செய்கையில், அசதியாக சாய
சிவன் தோளை காணாது துவண்டது இல்லையோ ?
பக்தர்கள் வரம் நிறைவேறி ஆனந்திக்கையில்
நெகிழந்து ,அழுத்தி பிடிக்க சிவன் கரம் தேடாதோ?

ஆர்த்தியின் பின்னொளியில் கண்டோம்,
உன்னை அம்மை தடுப்பவளாய் மட்டும்
தனித்து இயங்கும் திடமான உன் ஆளுமையை
பிரசாதமாக ,ஒரு துளியை சுவைத்திருந்தாலும்
இந்த கதி வந்திருக்குமா ,எங்களுக்கு?

ஆதியிலிருந்து பார்த்து கொண்டிருப்பவளே!
எப்போது வீழ்ந்தோம்? எதனால் வீழ்ந்தோம்?
சொல்லடி சிவசக்தி, சுடர்மிகும் அறிவுடன் மாற்றிவிடு .

-சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationமுத்து டிராகன் – சீன நாடோடிக் கதைThe Hindu Temple, Happy Valley. Hong Kong `Skandha Sashti’