சுனாமியில்…

   

 

வாழும் மனிதர்க்கிடையில்

வரப்புக்கள்தான் அதிகம்..

சுற்றிலும் சுவர்கள்-

ஜாதியாய் மதமாய்,

இனமாய் மொழியாய்..

இன்னும் பலவாய்…

இணைத்தது இயற்கை-

சாவில் ஒன்றாய்..

சவக்குழி ஒன்றாய்..

சுருட்டியது ஒன்றாய்…

சுனாமியில் தொலைந்துபோன

சொந்தங்களுடன் டிசம்பர்26…!

 

 

        -செண்பக ஜெகதீசன்…

Series Navigationஅன்பின் அரவம்பொருள்