சூர்ப்பனையும் மாதவியும்

செல்வக்குடியில்
செம்மைப் பண்பில்
மனைவியின் அன்பில்
ஊறித் திளைக்கும்
ஆண்மை உருவங்கள்
வீதியில் உலவுகின்றன
இராமனாக இராவணனாக
கோவலன்களாக.

ஆண்மையை சுகிக்கத்
துடிக்கும் சூர்ப்பனை
மாதவிகள் வீசும்
தூண்டில்களின் காமப்
புழுக்களுக்கு இரைகளாக
கோவல மீன்களும்
தூண்டில்களை விழுங்கும்
சுறா இராமன்களை வீழ்த்த
சகோதர இராவணன்களும்
களமிறங்கியதில்
கண்ணகிகளும் சீதைகளும்
உயிர்ப்புப் பெறுகிறார்கள்.

சூர்ப்பனை மாதவிகளின்
ஆட்டுவிப்பிலும்
கண்ணகி சீதைகளின்
சாபத்திலும் கொல்லப்பட்டவரென
நீள்கிறது கோவல
இராவணன்களின் பட்டியல்.

கண்ணகி  சீதைகளின்
அகோரப் பசிகளுக்கு
இரைகளாக புதிய கோவல
இராவண ஆண்மைகளைப்
பிடித்து வரக் கடைத்தெருவில்
வாசம் கொள்கின்றனர்
மாதவி சூர்ப்பன ஏவல்கள்.

-சோமா
9865390696

Series Navigationஎமதுலகில் சூரியனும் இல்லைக‌ரிகால‌ம்