சொல்வலை வேட்டுவன்

தொடங்கத்தயங்கி நின்ற
எனது காற்புள்ளிகள்
உனது மேற்கோள்கள்

தொடத்தயங்கும்
உனது பதங்கள்
எனது வரிகள்

தர்க்கங்களைக்கடந்து
நிற்கும் உனது விவாதங்கள்
எனது வாக்கியங்கள்

பொருளை வெளிச்சொல்ல
தாமே நாணி நின்ற
உந்தன் சொற்கள்
எனக்கு இடைவெளிகள்

நீ விட்ட இடத்திலிருந்து
நான் துவங்கினால் அது கவிதை
நீ துவங்கினால் ?

– சின்னப்பயல் ( chinnappayal@gmail.com)

Series Navigationஎங்கோ தொலைந்த அவள் . ..குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி