டிஷ்யூ பேப்பர்

Spread the love

 

 

ஆழ்ந்த பரிமாற்றம்

நிகழவில்லை

ஒரு தலைப் பட்சமாகக்

கொட்டித் தீர்த்தாள்

 

சிறகுகளின் பெருஞ் சுமை

வலியை

அவளிடம் பகிர முடியவில்லை

 

நுண்ணுணர்வில்லாதவன் நீ

காகிதங்கள் மட்டுமே

பூக்கும் கருவேல மரம் நீ

 

தழும்புகளைக்

காயங்களாக்கவா

என்னைத்

தேடி வந்தாய்?

 

இதழைத் தாண்டவில்லை

உஷ்ணமான

எதிர்வினை

 

இன்னும் அடங்கவில்லை

சாணைக் கல்வெட்டு

தீப்பொறிகள்

 

உறங்காத கண்களில்

கனன்ற விரகம்

 

மெல்லிய தழுவல்

எழுப்பிய

பெருந்தீ

 

அவள் வெளிநடந்ததும்

உணவக மேசைத் துணை

நமத்துப் போன

டிஷ்யூ பேப்பர் உருண்டைகள்

 

Series Navigation