தக திமி தா

பொய்மைகள் திரை கட்டி
உடல் மறைத்த கூடு
சட்டமிட்ட மனமெனும்
பெட்டியினுள் ஓர் உக்கிர நடனம்
ஊழித்தாண்டவம்
தீப்பொறி கிளப்ப
உணர்வுகள் கொண்டு தீட்டிய
கூரிய போர்வாள்

சிறிதும் அயர்வின்றி சுழற்றப்பட

இரத்தக்களரியானது நெஞ்சம் முழுவதும்
காயங்கள் வெளித் தெரியாதிருக்க
உலர்ந்து வறண்ட உதடுகளில்
புன்னகை சாயம்
அதிலும் தெறிக்கும் சிவப்பாய்
குருதி வர்ணம்
அனல்களில் ஆகுதி கொடுக்கப்பட
சாம்பலானது பிண்டமெனும்
மெய்
Series Navigationஇருள் போர்வைகளின் முடிச்சுக்கள்யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்