தடங்கள்  

Spread the love

 

சத்யானந்தன்

 

நகரின்

தடங்கள் அனேகமாய்

பராமரிப்பில் மேம்பாட்டில்

ஒன்று அடைபட

ஒன்று திறக்கும்

 

காத்திருப்பின்

கடுமைக்கு

வழிமறிப்பே

குப்பையின்

எதிர்வினை

சுதந்திர வேட்கை

அடிக்கடி

சாக்கடைக்குள்

பீறிட்டெழும்

 

மண் வாசனை

நெல் மணம்

மாங்குயிலின் கூவல்

தும்பி தேன்சிட்டு

என்னுடன் கோலத்தில்

புள்ளிகளாய்

இருந்த காலத்தின்

தடம்

மங்கலாய் மிளிர்ந்து

மறையும்

 

நகரம் நீங்கிச்

செல்லக் காணிக்கை

தந்தாலே

நெடுஞ்சாலை

அனுமதிக்கும்

 

ஆளுயரச் சக்கரங்கள்

விரையும் வாகன

வீச்சிலும் தென்படும்

கோடுகள் இல்லாப் புள்ளிகள்

மட்டும்

காய்ந்த மண் நெடுகத்

தடமே இல்லை

 

அரியதாய் எங்கோ

ஈர மண்

அதுவும் சுமக்கும்

டிராக்டரின் தடம்

Series Navigationபாவண்ணன் கவிதைகள்ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம்