தட்டுப்பாடு

Spread the love
 

உடன் வரும் 

வழக்கமாய் வர்ணிக்கப்பட்டு

அன்று கவனிக்காமல் விடப்பட்ட

வெண்ணிலா..

கடந்து செல்லும்

தீப்பெட்டி அடுக்கினாற்போன்ற

கட்டிடங்கள்..

தன் குறிக்கோள் மறந்து

தெரு நாய்களுக்கு அடைக்கலம்

தந்திருந்த குப்பை சூழ் குப்பைத்தொட்டிகள்..

குச்சி மட்டைகளும்

நெகிழி பந்துகளாலும்

ஆன மட்டைப்பந்து போட்டிகள்..

சிறுநகர வீதி..

ஏதோ சொல்ல நினைத்து

உன் கை சீண்டும் என் துப்பட்டா..

என் நாசி தீண்டும்

ஏதேதோ செய்யும் என

விளம்பரப்படுத்தப்படும்

உன் வாசனை திரவியம்..

காற்றும் எதுவும் புக முடியும்

இடைவெளியில் நாம்..

சொல் தட்டுப்பாடு,

என் மனதில் நிகழும்

வேதிவினை போன்றவற்றை விவரிக்க மட்டும்..
 

Series Navigationஒலிபெறாத பொய்களின் நிறங்கள்கடக்க முடியாத கணங்கள்