தனித்திருப்பதன் காலம்

இப்பொழுதைய இந்த

தனிமை நிமடங்களை

எச்சரிக்கை மிகுந்த

தருணமாக

மாற்றியமைக்கிறது

காலம் .

 

தனித்திருப்பது ஒன்றும்

ஆபாயகரமனது அல்ல

கால சிந்தனை முறையை

அதனதன் நிறைவை

நிகழ செய்யும் ஒன்றினை

எப்பொழுதும்

செய்ய விட்டதில்லை

காலம் .

 

சுயங்கள் பின்னப்பட்டிருக்கும்

முடிச்சுகளை தனிமையின்

ஏதோ ஒரு நொடிகளும்

அதன் காலமும்

விடுவிக்க காத்திருக்கிறது .

 

காலத்தின் இயக்கம்

நடைபெறாத ஒரு

நிகழ்வை

காட்சிப்படுத்துகிறது

வெற்றிடத்தின் விசை

பரவல் .

 

அதன் நொடிகளின்

இடப்பெயர்வு

நினைவலைகளை

சிதறடிக்கிறது .

 

எதிர்ப்படுதலில் எந்தன்

மையநோக்கு விசை

குறிக்கப்படுகிறது

விலகிய கோணம்

மாற்றியமைக்கப்படலாம் .

 

உணர்த்தும் விசையின்

இயக்கம் விடுப்படுகிறது

ஈர்ப்பின் மையமாக

மாறுகிறேன்

விசையில் கரைகிறேன் .

 

இப்பொழுது

காலத்தின் அமைவில்

என்னை காண்பதற்கு

பதிலாக உணர மட்டுமே

முடிகிறது .

-வளத்தூர் தி .ராஜேஷ் .

 

 

Series Navigationஉறவுகள்ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5