தான் (EGO)

-வே.பிச்சுமணி

உன்னை மாற்றிகொள் எனும் சொல்
உனது தான் விழிக்க செய்துவிட்டது
நம்மிடையே அமைதி பள்ளத்தாக்கு
உன் மனதில் வெறுப்பு மண்டியது
விரோத கொடி ஆக்டபஸ் கையாய் பரவுகிறது
உனக்கும் எனக்கும் உள்ள பகைவர்கள்
சந்தர்ப்பத்தை சாதகமாக்க வளையவருகிறார்கள்
வெறுப்பு அவர்களை விரட்ட மறுக்கிறது
தூபங்கள் நம்மை அந்நியபடுத்துகின்றன
எனக்கெதிராய் கனைகளை ஏவுகிறாய்
எனது தற்காப்பு கேடயத்தை தாக்கும் ஆயுதம் என்கிறாய்
சூரியனின் அண்மையினால் நிலவே
புளுட்டோவின் கோள் அந்தஸ்தை நீக்கிறாய்
இன்றைய வெற்றி உனதாக இருக்கலாம்
நாளைய வெற்றி நான் அடையலாம்
பேசினால் பிரச்சனை தீர்ந்துவிடும்
யார்வந்து முதலில் பேசுவதென்பது
அலை நின்றபின் நீந்த கரையில் காத்திருக்கிறது
நமது நட்பு உதிர்ந்த மலர்களா
உடைந்த கிளைகளா காலத்தின் கையில்

Series Navigationஇரவுதோறும் கரும்பாறை வளர்கிறது‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை