தேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை வலியுறுத்தும் தேர்தல் முடிவுகள்

      2014 நாடளுமன்ற தேர்தல் முடிவுகள் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை நோக்கி போராட வேண்டிய கட்டாயத்திற்கு  நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட பல பிரிவினரை தள்ளி சென்றால் உண்மையான மக்கள் ஆட்சியை நோக்கி நாம் பயணிக்கலாம்.
    சாதனைகள் என்று  ஊதி பெரிதாக்கப்பட்ட பொய்கள்,சாதி மத வெறியை தூண்டுவதன்  மூலம் 30 சதவீத மக்களின் ஆதரவை பெற்றால் வெற்றி அடைய முடியும் என்ற நிலை மக்கள் ஆட்சியில் மேல் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சிதைத்து விடும்.குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒரு இடம்/ஒரு சதவீதம்  கூட ஒதுக்காமல் வெற்றி பெற முடியும் என்ற தற்போதைய சூழல் மாற போராட வேண்டும்.
  அண்ணல் அம்பேத்கர் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்றவர் கிடையாது.மிக எளிதாக சாதி,மத உணர்வுகளை தூண்டி,பொய்களை பரப்பி வெற்றி பெரும் நிலை இருந்ததால்,மடர்வர்கள் ஒன்று கூடி SC /ST  மக்கள் ஒரு இடம் கூட வெற்றி பெரும் வாய்ப்பு இல்லாமல் போகும் நிலை இருந்ததால் அரசியல் நிர்ணய சபையில் போராடி SC /ST மக்களின் மக்கள் தொகை சதவீதத்திற்கு ஏற்ப நாடாளுமன்ற/சட்டமன்ற இடங்களை கட்டாயம் ஒதுக்க வேண்டிய நிலையை  அரசியல் சாசனத்தில் உருவாக்கினார்.
   SC /ST மக்களை எதிர்க்கும் கட்சியாக இயக்கமாக இருந்தாலும் அவர்களும் கட்டாயம் குறிப்பிட்ட தொகுதிகளில் SC /ST மக்களை மட்டும் தான்  நிறுத்த வேண்டும் என்ற நிலை இருப்பதை போல சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு வந்தால் அவர்களை அடியோடு புறக்கணிக்கும் பா ஜ க போன்ற கட்சிகள் கட்டாயம் குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் அவர்களை நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படும்.எந்த கட்சியும் குறிப்பிட்ட மதத்தை/சாதியை சார்ந்தவர்களை மட்டும் அவர்கள் போட்டியிடும் இடங்களில் நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் மத/சாதி நல்லிணக்கம் மலர வாய்ப்புகள் அதிகம்.
   மக்கள் தொகையில் பெண்களின் சதவீதத்திற்கு ஏற்ப  பெண்களின் இட ஒதுக்கீடும் எளிதாக நிறைவேறும்.இப்போது நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 இடங்களோடு இன்னொரு 543 இடங்களை கட்சிகள் பெரும் வாக்கு சதவீதத்தை  வைத்து வழங்கினால் சில கட்சிகள் கோடிக்கணக்கில் வோட்டுக்கள் பெற்றும்  ஒரு இடம் கூட கிடைக்காத நிலை மாறும்.
   கட்சிகள் தாங்கள் வாங்கும் வோட்டு சதவீதத்தின் மூலம் தேர்தெடுக்கபடும் வேட்பாளர்களின் பெயர்களை,வரிசையை தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் நடப்பதற்கு முன் சமர்பிக்க வேண்டும்.வோட்டு சதவீதத்தின் அடிப்படையில்  தேர்ந்தெடுக்க தரப்பட்ட பட்டியலில் முதல் நபர் ஆண் என்றால்,அடுத்தவர் பெண்,என்று சரிபாதி பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.ஆண்,பெண் இரு வேட்பாளர்களிலும் இட ஒதுக்கீடு முழுமையாக கடைபிடிக்க பட வேண்டும்.நேரடி போட்டியில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் வெற்றி பெறவில்லை அல்லது வெகு குறைவாக வெற்றி பெற்ற நிலையில் .வாங்கிய வாக்கு சதவீதங்களை வைத்து வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்க படும் போது குறைவான எண்ணிக்கையில் உள்ள பிரிவுகளை சார்ந்த வேட்பாளர்கள்,பாலினத்திற்கு அவர்களுக்குரிய  இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் வேட்பாளர்களின் தேர்வை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும்.
   உத்தர்ப்ரதேசதில்  19 சதவீத வோட்டுகளை பெற்ற பஹுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடையாது.19 சதவீத மக்களை கொண்ட இஸ்லாமியருக்கு தேர்தலில் போட்டியிட ஒரு இடம் கூட தராத பா ஜ க 80ஈள் 73 இடங்களை வென்று உள்ளது.குஜராத்தில் ஐந்து சட்டமன்ற,நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு இஸ்லாமியருக்கு கூட போட்டியிட வாய்ப்பு தராத பெருமை பா ஜ க விற்கு உண்டு.பல மாநிலங்களிலும் பா ஜ க வின் நிலை அது தான்.இதை மாற்ற வேண்டியது நம் கடமை.இதே போல sc /st /obc மக்களை முழுமையாக எந்த கட்சியாலாவது ஒதுக்க முடியுமா
  அப்படி ஒதுக்கினால் போராட்டங்கள் வெடிக்காதா.ஆனால் சிறுபான்மையினரை ஒதுக்குவதை ஒருபொருட்டாக கூட யாரும் எடுத்து கொள்ளாதது வேதனை தரும் ஒன்று.அனைவருக்கும் உரிய பங்கு கிடைக்கும் வகையிலான தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி போராடினால் உண்மையான மக்கள் ஆட்சி மலரும்.
Series Navigation