தொன்மம்

Spread the love

சத்யானந்தன்

அன்று
நான் அழைத்தபோதெல்லாம்
உங்கள் கைபேசி
அழைப்பை ஏற்காவில்லை

என்
குறுஞ்செய்திகள்
கண்டுகொள்ளப் படவில்லை

நேரில் சந்தித்த போதும்
நீங்கள் பிடி கொடுக்கவில்லை

உங்களைத் தேடிய
சூழ்நிலை மட்டுமல்ல
பின்னர்
என் தேவையா
இல்லை உங்கள் இடமா
எது காலாவதியானது
நினைவில்லை

இன்று
உங்கள் பெயரும்
கைபேசி எண்ணும்
என்னுடையதில்
தொன்மமாய்

Series Navigationவலையில் மீன்கள்இரத்தின தீபம் விருது விழா