நள்ளிரவின்பாடல்

Spread the love

 

நடுத்தெருவில்விளையாடும்

பூனைக்குட்டிகளைப்பார்த்திருக்கும்

இரவொன்றின்பாடலை

நான்கேட்டேன்

 

மோதிச்செல்லக்கூடியநகர்வனபற்றிய

எந்தப்பதற்றமுமின்றி

துள்ளுமவற்றைத் தாங்கிக்

கூடவிளையாடுகிறது

சலனமற்றதெரு

 

யாருமற்றவீட்டின்கதவைத்தாளிட்டு

அந்தநள்ளிரவில்தெருவிலிறங்கி

நடக்கத்தொடங்குகையில்

திசைக்கொன்றாகத்தெறித்தோடி

எங்கெங்கோபதுங்கிக்கொள்கின்றன

மூன்றுகுட்டிகளும்

 

நான்நடக்கிறேன்

தெருசபிக்கிறது

நிசிதன்பாடலை

வெறுப்போடுநிறுத்துகிறது

 

இந்தத்தனிமையும்

இருளும்தெருவும்

வன்மம்தேக்கி வைத்து

எப்பொழுதேனுமென்னை

வீழ்த்திவிடக்கூடும்

 

எம்.ரிஷான்ஷெரீப்,

இலங்கை

mrishanshareef@gmail.com

Series Navigationஉபதேசம்வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -7 மூன்று அங்க நாடகம்