நான்கு நண்பர்களும் சசிகுமாரும்

This entry is part 11 of 36 in the series 30 செப்டம்பர் 2012

Beautiful Comeback for Sasikumar!,தொடர்ந்து ரசித்து வந்த என்னை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டேயிருந்தார் நாடோடி’களுக்கப்புறம்.இப்போது திரும்பவும் நம்மை அவர் பக்கம் திருப்பியிருக்கிறார் சசி..! என்ன கொஞ்சம் சுப்ரமணியபுரம்/நாடோடிகள் சாயல் இருந்தாலும் அழகான காதல் கதை..! சுந்தரபாண்டி “பஸ்”பாண்டியாவே போய்ருமோ முதல் பாதி முழுக்க பஸ் பஸ் ..பஸ் மச்சி :-) # அழகுப்பாண்டி..!

Friends களுக்காக எல்லாத்தையும் விட்டுக்குடுக்குறார்ப்பா நம்ம சசிகுமார். பகைவனுக்கும் அருள்கிறார் நம்ம சசி. கொஞ்சமா தலைய மட்டும் சாய்ச்சிக்கிட்டு தாடிய லேசா நீவிவிட்டுக்கொண்டு அவர் பேசற அத்தனை வசனமும் பிரமாதம். இப்ப திரும்பிவந்து இதுதான்யா சசி’ன்னு நிரூபிக்கிறார். Cowboy மாதிரி ரெண்டு குதிரைல நின்றுகொண்டு போனப்பெல்லாம் இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு சசீன்னு எனக்கு தோணியது அவருக்கு தெரிஞ்சிருச்சு போலருக்கிறது. திரும்பி வந்துட்டார். போராளி’யும் ஈசனும் அவருக்கான Subject-ஏ இல்லை. ஏதோ சமுத்திரக்கனி சொன்னாருங்கறதுக்காக செய்திருப்பார் போலருக்கிறது.

கதை ஒண்ணும் பெருசா இல்லை. அதை முழுக்க நம்மை அமர்ந்து பார்க்கும் வண்ணம் சசியின் ஸ்டைலிலேயே சொல்லியிருப்பது தான் Class. பஸ் வேகமா போனாலும் படம் மெதுவாத்தான் நகருது முதல் பாதி முழுக்க. திரும்பத்திரும்ப பஸ்ஸிலேயே போகிற மாதிரி காட்சிகள் இருக்கிறதால , ஏதோ ‘அட்டகத்தி’ மாதிரி இதுவும் போயிரும் போலருக்கேன்னு நினைத்தால் நல்ல வேளை , அப்புக்குட்டி’யின் மரணத்துக்குப் பின்னர் Story Back to the Track ☺

இந்த கேரளாவிலருந்து வர்ற பொண்ணுங்கல்லாம் எப்டி தமிழ்ப்பொண்ணுங்க மாதிரியே தெரியிறாங்கன்னே தெரியல. அச்சசல் தமிழ் கிராமத்துப்பொண்ணு போலவே இருக்கிறார் லட்சுமி மேனன். “ஏலத்துல இருந்து மாசக் கான்ட்றாக்ட்டுக்குப் போய்ட்டாங்யடி” என்று படம் முழுக்க வந்து சொல்லும் தோழியும் அருமை.

அப்புக்குட்டிக்கும் , அந்த அறிவழகனுக்கும் தீர்ப்பு சொல்ல ஒவ்வொரு பியர் பாட்டிலாக அவர் திறந்து திறந்து குடித்துக்கொண்டே இருப்பது புதுமை.இதுவரை இந்த மாதிரி பஞ்சாயத்து சீன்லயெல்லாம் ஒரு சொம்பும் பெரிய ஆல மரமுமிருக்கும்.இதுல ஒரு குட்டிச்சுவரும் இன்னும் பல பியர் பாட்டில்களுமாகக் காட்சியளிப்பது இன்னும் புதுமை.தீர்ப்பு நமக்கும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருப்பதும் அதைத்தொடர்ந்து வரும் காட்சிகள் திருப்தியளிப்பதுமாக இருக்கிறது.

அறிவழகனை விடவும் அப்புக்குட்டி அழககாத்தெரிகிறார் படத்தில். லட்சுமி மேனனை
கவர் பண்ணுவதில் ஆரம்பித்து, இல்லை எனத்தெரிந்ததும் வசவுவதும், ஹோட்டலில் சசியுடன் அமர்ந்து சண்டை போட எத்தனிப்பதுமாக அத்தனை காட்சிகளும் அவருக்கு நல்ல தீனி.
Biggest Let down of the Movie ன்னு சொல்லணும்னா அது ரகுநந்தனின் இசை, எங்குமே இல்லை அவர். பாடல்களில் 80களின் ராஜாவின் பாணி, (ராஜாவே அந்த ஸ்டைலில் இசைப்பதில்லை இப்போதெல்லாம்) .பின்னணியில் அதே பாடல்களை ஞாபகப் படுத்தும் படியான Instrumental Music என்று ஒப்பேற்றியிருக்கிறார். கிப்ரான், அநிருத், போல (அச்சு’வைக்கூட சேர்த்துச் சொல்லலாம்) இவருக்கும் ஒரு நல்ல இடம் உண்டு என்று நம்பியது வீண்போகிறது. “தென்மேற்குப் பருவக்காற்று” படத்தில் இடம் பெற்ற “ஏடி கள்ளச்சி” போல ஒன்றை இங்கும் எதிர்பார்த்திருந்தேன்.அதன் அருகில் நிற்கக்கூட ஒரு பாடலும் தேறவில்லை.

“நாலு மாசமா Follow பண்றேன் மச்சி, ஆனா அவ பேர் தெரியாது, எங்க படிக்கிறான்னு தெரியாது, எந்த ஊருன்னும் தெரியாது, எந்தக்காலேஜுன்னும் தெரியாது “ ஊர்ல பல பேர் இப்டித்தான் சுத்திக்கிட்டு இருப்பாங்ய..கேட்டா Sincere Love மச்சின்னு அளப்பாங்ய”
பரோட்டா சூரி.! இப்டி வேஷத்துக்கா “கூப்டுய்யா அந்த பரோட்டா சூரிய” என்று சொல்லுமளவுக்கு வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு எப்போதும் ஆஜராகிவிடுகிறார் அவர்.

படத்தில் ஏகத்துக்கு Buildup கொடுத்து அறிமுகமாகிறார் சசி, மாலை’யை உவந்து அணிந்து கொள்கிறார். பஸ்ஸில் அவர் வந்தவுடன் பாடல் அடியோடு மாறுகிறது. எல்லோரும் அவருக்கெனவே வழிவிட்டு செல்கின்றனர்,,ஹ்ம்,,எங்கயோ கருகுதே சசி’ன்னு நினைக்கும்போது அந்த Hero Worship அடியோடு மாறிப்போகிறது இடைவேளைக்குப் பின்னர், அப்பாடா என்றிருக்கிறது நமக்கு,

“கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவது அப்ப இருக்கிற சூழ்நிலைகள் அந்த மாதிரி அமைந்து விடுவது தான்” , “உங்க பொண்ண இன்னொருத்தன் கேலி பண்றான்ங்கறதுக்காக அவனக்கொலையே பண்ற அளவுக்குப்போயிருக்கான்னா அவளை எவ்வளவு தூரம் விரும்பியிருப்பான்” , “அதுல நம்ம பொண்ணுக்கும் சரிபாதி பங்கு இருக்கு”, “ எதிரியே இல்லாம வாழ்ந்துறலாம் ஆனா முன்னேற முடியாது” “பழகின நீங்களே இப்டி பண்ணா யார்ட்டடா பாத்துப்பழகறது “ “ குத்துனது நண்பனாருந்தா செத்தாக்கூட சொல்லக்கூடாது அதாண்டா நட்பு “போன்ற வசனங்கள் எல்லாம் ரொம்பவே நல்லாருக்கு, “பஞ்ச்” டயலாக் மாதிரி Tight Closeup-ல வந்து நம்மள பயமுறுத்தாம சொல்றதும் நம்பும்படியாவும் இருக்கு,!

கடைசிக்காட்சிகளில் அறிவழகனும் சேர்ந்து சசி’யைக்குத்தும் போது “You too Brutus” என்பது போல ஒரு பார்வை பார்க்கும் சசி,. காதலியைப்பார்க்கச்செல்ல புதுப்புது ஆடைகளணிந்துகொண்டு செல்லும் சசி , பாட்டிகளோடு சேர்ந்து கூத்தடிக்கும் சசி, டீக்கடைப்பெஞ்சில் அமர்ந்து கொண்டு கலாய்க்கும் சசி என்று படம் முழுக்க வியாபித்திருக்கிறார், தங்கை செண்டிமெண்ட் என்று மெகா சீரியல் மாதிரி ஏதும் சொல்லாமல் விட்டிருப்பது மிகவும் ஆறுதல்.

விரசம் தலைதூக்காமலும், தேவையற்ற காட்சிகளை வைத்து திரைக்கதையை திசை திருப்பாமல் இருப்பதும் படத்துக்கு ஒரு PlusPoint. படத்தில் எத்தனையோ காதல் தோல்விகள் இருப்பினும் ஒரு குடி’ப்பாடல் போலும் இல்லாமலிருப்பது பெரிய ஆறுதல் ☺ காதலில் வெற்றி என்று தெரிந்த போதிலும் , கதையோட்டத்திலிருந்து விலகி வெளிநாடு சென்று அவர்களின் ஏளனப்பார்வையோடு அரைகுறை ஆடைகளோடு பாடாதிருப்பதைத் தவிர்த்திருப்பதும் அருமை.

“ஒவ்வொரு Friend ம் தேவை மச்சான்”, “என் Friend ப்போல யாரு மச்சான்னு” Slogans சொல்லிக்கொண்டு திரிந்தாலும் , உள்ளூர பலபேர் இப்டித்தான் சான்ஸ் கிடைச்சா போட்டுத்தள்ளவே நினைக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.தமக்குக் கிடைக்காதது அவனுக்கு கிடைக்கக்கூடாது என்று நினைப்பவர்களே அதிகம்.அங்கும் ஒரு எல்லை வகுத்துக்கொண்டு அவர்களின் வாழ்வில் தலை நுழைக்காது இருந்தால் எல்லா Friendsம் கடைசிவரை நல்லவர்களாகவே இருப்பார்கள் என்பதும் உண்மை.

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationசிறைஓடியது யார்?
author

சின்னப்பயல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *