நான் வெளியேறுகையில்…

Spread the love

நான் வெளியேறுகையில்

என்னைத் தொடர்ந்து

புன்னகைத்தபடி

வருவதில்லை நீ வாசல்வரை

முன்பு போல

கட்டிலிலே சாய்ந்து

என்னையும் தாண்டி

கதவினூடாகப் பார்த்திருக்கிறாய்

தொலைதூரத்தை

அமைதியாக

பறக்கிறது பட்டம்

மிகத் தொலைவான உயரத்தில்

நூலிருக்கும் வரை

தெரியும் உனக்கும்

என்னை விடவும் நன்றாக

– இஸுரு சாமர சோமவீர

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationஅ. முத்துலிங்கம் அவர்களின் “அமெரிக்க உளவாளி”: போட்டிசிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ