நிலைத்தகவல்

கூச்சல்களும் எதிர்ப்புகளும்
நிலைத்தகவல்களிலேயே முடிந்துவிடுகிறது

ஆதரவுகளும் அரவணைப்புகளும்
ஒருசில லைக்குகளோடு முடிந்துவிடுகிறது

பெண்ணியமும் ஆணியமும்
ஆங்கில விசைப்பலகையின் விசை கொண்டு
தமிழுருவில் எழுதப்பட்ட வலைப்பதிவோடு முடிந்துவிடுகிறது

அவலங்களும் அராஜகங்களும்
பின்னூட்டங்களிலும் எதிர்வினைகளிலுமே தீர்ந்து விடுகிறது

எனக்கென்னவாயிற்று,
ஒரு கையில் கோப்பைத்தேநீருடன்
நானெழுதிய இந்தக்கவிதை(?)
பிரபல வாரப்பத்திரிக்கையில்
வெளிவந்தால் மட்டும்
எனக்குப் போதுமென்றாகிவிட்டது.

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationஅவன் – அவள் – காலம்