நீ தந்த செலாவணிகள்

 

 

முன்னகர்வுகள்

பத்து வார்த்தை

மிகா மின்னணு

சம்பாஷணையே

 

அதே இரு நபர்

கட்டாயமில்லை

உரையாடுபவர்

மாறியும் பரிமாற்றம்

தொடர்ச்சியில்

 

உன் விளக்கங்கள்

மறிதலிப்புக்கள்

செலாவணிகளாய்

 

இலக்காய்த்

தென்படும் புள்ளிகள்

வேகம் திசை

யாவும் வசப்படுத்தும்

வித்தை ரகசியமில்லை

 

மௌனம்

மனம் திறப்பு

சொல்லாடல்

தேர்வாகும்

நொடி அந்தரங்கம்

 

Series Navigationஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு