நெருப்பின் நிழல்

ஒற்றை மெழுகுவர்த்தி

பிரகாசமான சுடர்.

 

.

காற்றின் அசைவுக்கு

சுற்றி சுழன்று

அணைகிற போக்கில்

சப்பனமிட்டு -பின்

நிலைபடுத்தி

நெடுநெடுவென்று அலைஅலையாய்…

வாழ் சூட்சம  நெளிவுகள் .

 

.

சூட்சமங்களின் அவசியமற்று

மெழுகுவர்த்தியின் காலை சுற்றி

வட்டமாய், நீள்வட்டமாய்,நெளிநெளியாய்

மோன நிலையில் அசைவற்று –

படுவேகமாய்,படுவேகமாய்,

உருமாறி திளைப்பில் துள்ளுகிறது

நெருப்பின் நிழல்.

 

.

அணைந்த நெருப்பு,

தன் மரணத்திற்கு

ஒப்பாரி வைக்கிறது

கருகிய வாசனையுடன்

மெலிந்த புகையுடன்.

 

.

மறைந்த நிழல்,

மரணத்தை பதிக்காத

இசைவான தன் மறைவில்

கவிதை புனைந்தது

இசையான தன் இருப்பை

 

.

– சித்ரா (k_chithra@yahoo.com)

 

Series Navigationபெற்றால்தான் பிள்ளையா?நிழலின் படங்கள்…