பத்தி எரியுது பவர் கட்டு

 
பத்தி எரியுது பவர் கட்டு
செப்புவது யாரிடம் சொல்லடி..?
சுத்தி எரியுது சூரியன் …
தோலை உரிக்குது வேர்வை !
நெஞ்சில் ஷாக் அடிக்குது
நிறுத்தி விட்ட மின்சாரம்…!

ராஜியத்தில் நடக்குது
அம்மா வுக்கு.. ஆராதனை .!
பூஜியத்தில் பவர் மீட்டர்
பூஜித் தாலும் பயனில்லை !
பானைச் சாதம் பொங்கலை

பார்ப்ப தெப்படி ஜெயா டிவி  ?
நகரில் பவர் போனதால்
நங்கை யர்க்குத்  திண்டாட்டம்..!

உயிரோடு புதையும் சீரியல் பெட்டி ..
பெட்டிப் பாம்பாகும்  மின்வெட்டி….!.
குழாய் வரண்டு நீர் வரலை..
மின்விசிறி நின்னு காத்து வரலை..
ஏ. சி இருந்தும் வேர்க்குது
என் மிக்ஸி அரைக்க விழிக்குது..

அம்மா ஆளும் ஆட்சியிலே

சும்மா தூங்குது கிரைண்டர்
இலவச மடி கணினி
பவரின்றி பரிதவிக்குது ..!
பள்ளியில் காலாண்டுத் தேர்வு..
படிக்காத மாணவர் யாவர்க்கும் சோர்வு..!
வீதியில் சிக்கனல் இல்லை
மோதி முட்டும் வாகனங்கள்  !

பல்லுப் போன பாட்டியாக
செல்லுப் போன கைபேசி…!
கொண்டு போகும் எங்களை
அம்பது வருச முன்பேசி..!
மின்சாரம் இல்லாத சம்சாரம்
மின்சக்தி இல்லாத விவகாரம்
மோகத்தில் வாழ்ந்த மின்சாதனங்கள்
தாகமாய் மின்சாரம் வேண்டுது…!

வேண்டாம் எலெக்டிரிக் சாதனங்கள்
வேண்டாம் எலெக்டிரிக் சீர்வரிசை..
தாய் வீட்டுச் சீதனமாய்…
ஓடும் ஜெனரேட்டர் ஒன்றை வேண்டு !
ஓலை விசிறி வாங்கு !
அம்மிக் கல்லு,,,கூடவே…

ஆட்டும் உரலும் தேவை..!
கொலுவில் தூக்கி வைத்திடு
நளின ரக மிக்ஸியை  !

நான்கு சுவர்க்குள் தினம் வேகிறேன்
மாண்டு கிடக்குது மடிக் கணனி
வேர்வை ஆறாய் ஓடுது.
குளிக்கக் குழாயில் நீரில்லை !

மின்சார  பிரேக்கிலே
என் கற்பனை அறுந்து போனது..!
எழுதிய கதை பாதியில் நிக்குது  ! .
எப்போது முடியும் மின் வெட்டு ..!
எப்போது ஓடும் மின்விசிறி ?
எப்போது மீளும் என் உயிர்ச் சிட்டு..?

வேத விநாயகா.!  அளி..வரமெனக்கு…
நிதமும் எரியும் மின்விளக்கு…!
நீ கரும்பை முறிப்பது போலத்தான்…
எமது எலும்பை முறிக்குது  பவர்கட்டு .!
பவர் போனால் நகர் தில்லை….
பறிபோன சோளக் கொல்லை..!

ஆயிரம் தேங்காய் இன்றுனக்கு.. !
ஆசையாய் ஏற்றுவோம்  நெய்விளக்கு..!
திண்ணைக்குச் சென்று நீ விளக்கு..!
கணனியில் என் கதை முடிவதற்கு
சீக்கிரம் மின்வெட்டை  நீ அகற்று..!
Series Navigationமருத்துவ தொழிலில் தேவை ரண சிகிச்சைஅக்னிப்பிரவேசம் -3