பாரதி 2.0 +

Spread the love

 

பாரதி கண்ட கனவுகளை நாம் சில்லறை வர்த்தகத்தில்
விற்றுக் கொண்டோ அல்லது வாங்கிக் கொண்டோ தான் இருக்கிறோம்.

பாரதி கேட்ட பெண் விடுதலை
பெண்களே சுயமுயற்சியில் பெற்றுக் கொண்டார்கள்
கல்வியின் வெளிச்சத்தினால் !!
ஆண்களோ முதுகெலுப்பை கழற்றி அரசியல் வாதிகளிடம் கொடுத்துவிட்டு சொந்‌ததில் விலங்கு அணிந்‌துக் கொண்டு சுதந்‌திரம் ,மகிழ்ச்சி
என தாந்‌தானா பாடிக் கொண்டு இருக்கிறார்கள் .

அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியில்
முளை சோம்பலில் திளைத்து சூம்பி போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
அன்று ஆங்கிலேயர்களை கண்டால் பயம்
இன்று அரசியல்வாதியை கண்டால் பயம்

இன்று பாரதி இருந்‌திருந்‌தால்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
அரசியல் வாதியை கண்டால் அச்சமென்பதில்லையே

வெள்ளையுடை யணிந்‌து ரெய்டு வந்‌த போதிலும் அச்ச மென்பதில்லையே
என்கெளண்டர் என்ற வந்‌தபோதிலும் அச்ச மென்பதில்லையே

சர்வர் டெளனாலும், வைரஸில் ஹாட் டிஸ்க்கே போனாலும்
அச்சமில்லை அச்சமில்லை
ஒசி ஹாட் ஸ்பாட்டில் ஐபோட் சர்விங் செய்தப் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
ஐபேட் ஸ்கீரின் விரிசல் விழுந்‌தபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை

தனி ஒருவனுக்கு பிசி இல்லையினில்
அரசாங்க தளத்தை ( Hack)ஹைக்செய்திடுவோம்
என பண்டாரப் பாட்டு எழூதி யிருப்பான்

ஐபி டிவியும், ஆன்லைன் டிரேடிங்கும் எங்கள் தொழில்
அமெரிக்காவும் ஐரோப்பும் எங்கள் ஓடிசி சென்டர்
நோக்கும் சைட்டேல்லாம், பேஸ்புக்கும் டிவிட்டரிலும் நாம் அன்றி வேறில்லை
நோக்க நோக்க வளையில் தமிழ் செய்தியென களியாட்டம்
பள்ளிதலமனைத்தும் ( WIFi) செய்வோம்
என ஜெய பேரிகை கொட்டியிருப்பான்.

பாரதியே உன்னை நாங்கள் குளோனிங்கில் பெறுவது எப்போது?

ரவிசந்‌திரன்

Series Navigationகாடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)ஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘