பிரித்தறியாமை

Spread the love

 

சத்யானந்தன்

 

எந்த ஊர்ச்

செங்கற் சூளைக் கல்

எந்தக் கட்டிடத்தில்

எந்தச் சுவருள்

ஐக்கியமானது?

 

கடற்பரப்பில்

அன்று புள்ளியாய்த்

தெரிந்த அதே

கட்டுமரமா

இன்று

கரையேறிக் கிடக்கிறது?

 

வாகன நெரிசலில்

மருத்துவ விடுதியில்

உணவகத்தில்

ரயில் நிலையத்தில்

காந்திருந்த வரிசைகளுக்குள்

என்ன வித்தியாசம்?

 

ராட்சத

வணிக வளாகத்தில்

எதிர் எதிர்ப்பக்கம்

நகரும் படிக்கட்டுகளில்

மேற்தளம் செல்பவன்

கீழிறங்கும் என்னைப்

பார்த்தா கையசைத்தான்?

நான் என்னருகில்

இருந்தவர் இருவருமே

பதிலளித்தோம்

Series Navigationஅந்நியத்தின் உச்சம்சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4