பிறந்தாள் ஒரு பெண்

வையவன்

பிறந்தாள் ஒரு பெண்
அடுத்தடுத்து ஐந்தாறு பெண்கள்
பிறந்த பண்ணை வீட்டின்
வழிநடையில் அந்தியிருள்
சூழ்ந்த அரைக் கருநிழலில்
கூடியிருந்த கும்பல் விலக்கிப்
பேறு பார்க்கச்சென்ற மாது
நிசி கழிந்து முகம் தொங்கி
திரும்பி வரக் கண்டு
கூட்டத்தில் நிசப்தம்.
அடுத்து அழுகுரல். பின் ஓர் ஓலம்
மீண்டும் பிறந்தது ஒரு பெண் குழந்தை
பெண்ணுரிமை பெண் சமத்துவம்
பேசலாம் வீரமாய்
பிறந்ததும் திறக்கின்றன
அடைத்து மூட முடியாத
கவலையின் கதவுகள்
கறந்து காட்டியது காராம்பசு
இருந்தாலும் அன்று கடவுளுக்கு
கண் ஆஸ்பத்திரிக்கு வழி காட்டி
எல்லாப் பெண்களும்
வாயாரச் சபித்தார்கள்
வேறென்ன செய்வார்கள்?
எந்த இதிகாசம் அவர்கள்
வென்றதை நிரூபித்திருக்கிறது?

Series Navigationஒப்பனை …ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்