பிறந்த மண்

Spread the love

மணல் குன்றில்
விளையாடுகின்றன குழந்தைகள்.

மலை ஏற்ற வீரர்களைப்போல்
அதன் உச்சியில் ஏற
நெகிழ்ந்து மண் சரிய
சிரிக்கின்றன .

மணலில் மலை செய்து
அதில் குகைகளைக்குடைந்து
கூழாங்கற்களை வாசலுக்குப்பதிக்கின்றன

மணலில் சித்திரங்களை,பெயர்களை
வரைந்து அழிக்கின்றன.

மணலில் செடியை நட்டு
நீர் வார்க்கின்றன.

அதட்டும் அழை குரல் அவசரத்தில்
எழும் குழந்தைகளின் மடியிலிருந்து
கொட்டங்குச்சி ஈரமண் இட்லிகள்
வீழந்து உடைகின்றன.

குழந்தைகளின் கால்களை
மணல் அலைகள் தழுவிக்கொள்கின்றன.

வீடு மீளும் குழந்தைகளின் உடலில்
பிரிய மறுத்த மணற்த் துகள்கள்
பிறந்தமண்போல் ஒட்டிக்கொள்கின்றன.

ரவிஉதயன்

Series Navigationமகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காககாலம் – பொன்