புதிய சொல்

சத்யானந்தன்

ஒரு மோசமான
தோல்வி
எதிர் நீச்சலிட எழும்
நூறு கரங்களை
ஓயச் செய்தது

ஒரு பிரம்மாண்ட வெற்றி
முளைவிடும்
நூறு
புதிய தடங்கள்
மண் மூடிப் போகச்
செய்தது

தற்செயலான
கரவொலிகள் கூட
அசலான கலைஞனின்
ஆன்மாவைக்
கட்டிப் போட்டது

கலையுலகும் இயங்குலகும்
செக்கைச் சுற்றிய
வட்டத்தில்
வெவ்வேறு புள்ளிகளில்

தினமும் ஒரு
புதிய பக்கத்தில்
ஒரு புதிய சொல்
கவிஞனுக்கே சாத்தியம்

Series Navigationதெரவுசுசந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழா