புள்ளியில் மறையும் சூட்சுமம்

Spread the love

பிசாசுகளை பிசாசு என்று
சொல்லக்கூடாது நாம்
புள்ளியில் மறைந்திருக்கலாம்
படைப்பின் சூட்சுமம்

மனிதனின் தேடுகையும்
மனிதனை தேடுதலும் வித்தியாசப்படலாம்
பிசாசு என்று சொல்லாதீர்கள்
உக்கிரமாய் உதவலாம் அவை தேடுதலில்

நான் பிசாசா என்று
என் பிசாசிடம் கேட்கிறேன்
அரூபமாய் புள்ளியில் மறைந்து போகிறது
வீரியமற்ற கனவின் மிச்சம் போல அது

வெட்கவானின் சினறிய பொழுதுகள்
வீறிட்டு அலறுகையில்
கையில் விளக்கேந்தி
புதுச் சொல் தேடுகிறது பிசாசு
தன் பெயரை அழகாக்கிக்கொள்ள

மிச்சத்தில் உழல்கிறான் மனிதன்
தானே பிசாசாய் ஆகிவிட்டது போல் !

-சு.மு.அகமது

Series Navigationபரிகாரம்கம்பன் கழகத்தின் பொங்கல் விழா