பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..

Spread the loveபடிக்க: http://pesaamoli.com/index_content_10.html

நண்பர்களே நல்ல சினிமாவிற்காக மாதந்தோறும் வெளிவரும் பேசாமொழி இணைய இதழ் செப்டம்பர் மாத இதழ் வெளிவந்துவிட்டது. இது 10வது இதழ். ட்ராட்ஸ்கி மருதுவின் அனிமேசன் பற்றிய தொடர், யமுனா ராஜேந்திரனின் திராவிட சினிமா பற்றிய கட்டுரை, தியடோர் பாஸ்கரனின் மீதி வெள்ளித் திரை நூலில் இருந்து ஒரு கட்டுரை, லெனின் விருது நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் சென்ற மாத தொடர்ச்சி, தமிழ் ஸ்டுடியோவின் 57வது குறும்பட வட்டம் பற்றிய பதிவு, செவ்வகம் இதழில் வெளிவந்த கோவா திரைப்பட திருவிழா பற்றிய கார்த்தியின் கட்டுரை, மலையாள மௌனப்படமான மார்த்தாண்ட வர்மா பற்றிய குறிப்புகள் என இந்த மாதம் அருமையான கட்டுரைகளுடன் பேசாமொழி வெளிவந்திருக்கிறது.

பேசாமொழி இணையத்தில் வெளியாகும் மாதம் இதழ். இந்த இதழை இணையத்தில் இலவசமாக படிக்கலாம்.

படிக்க: http://pesaamoli.com/index_content_10.html


அன்புடன் 


தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com
பேசாமொழி அச்சு வடிவில் – நிதியுதவி…நிதியுதவி கொடுக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236

நண்பர்களே,

தமிழில் வெகுஜன சினிமாக்களை தூக்கிப் பிடிக்கும் இதழ்களுக்கு எதிராக நிச்சயம் சினிமா பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த ஒரு இதழ் அவசியம். தவிர, ஒரு இயக்கத்துக்கு, அதன் எண்ணம் ஈடேற நிச்சயம் அச்சு வடிவில் ஒரு இதழ் தேவை. இன்னமும் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு சமூகத்தை வளர்த்துவிட்டு, அதை வளர்த்தவர்கள், தார்கோவ்ஸ்கி, குரோசாவா, பெர்க்மன்,கோதார், ஃபெலினி, ஜோல்தான் ஃபாப்ரி, மிக்லோச் யான்ஸ்கோ, ஜான் அப்ரஹாம், சத்யஜித் ரே, ரித்விக் கடக், என்று திரைப்பட ஆளுமைகளைப் பற்றி பேசுவதும், உலகின் அதியற்புத திரைப்படங்களை கண்டு சிலாகிப்பதும், உலகம் முழுக்க கலை என்கிற வடிவம் கொடுக்கிற பேரனுபவத்தை கொண்டாடுவதும், ஆனால் தமிழ்நாடு என்று வந்துவிட்டால், வெகுஜனப் படங்கள்தான் நமது மரபு, நமது கலாச்சாரம், அதுதான் நமது தேவை, அதன் வரையறைக்குள் இருந்து மட்டுமே அதை விமர்சிக்கிறோம் என்று சொல்வதும் யாரை ஏமாற்றும் வேலை என்று தெரியவில்லை.

தங்களுக்கு தெரிந்த உலக சினிமாவும், சினிமா என்கிற காட்சி வடிவம் கொடுக்கும் பேரனுபவமும், இந்த சராசரி பார்வையாளனுக்கு கிடைத்துவிட்டால், நம்மை கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிற அச்சமாக இருக்கலாம். அல்லது, எல்லாரும் உண்மையாகவே திரைப்பட ரசனை பற்றி தெரிந்துக் கொண்டால், நாம் அதுப் பற்றி பேசி நமது மேதாவி தனத்தை வெளிக்காட்டிக் கொள்ள முடியாது என்றும் நினைக்கலாம்.

இவை எல்லாவற்றையும் மீறி, தமிழிலும் சினிமா என்கிற காட்சி வடிவ கலையை, அது தரும் பேரானந்தத்தை சாதாரண பார்வையாளனும் உணரும் வண்ணம் செய்திட நிச்சயம் நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. அதற்கு பேசாமொழி இதழ் அச்சு வடிவில் வெளிவருவது அவசியம். நிச்சயம், சினிமா பற்றிய சரியான புரிதலை கொடுக்கும். பேசாமொழியை ஒரு அச்சு பத்திரிகையாக வளர்த்தெடுக்க இன்றே நண்பர்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை செய்திட வேண்டுகிறேன்.

இதில் இரண்டு வகை நிதியுதவிகள் தேவை. ஒன்று, தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இதழுக்கான பணத்தை கொடுத்து உதவுவது, பதிப்பாசிரியர் என்கிற அடையாளத்தோடு. இரண்டு தங்களால் இயன்ற தொகையை எப்போதாவது கொடுத்து உதவும் நண்பர்கள். இதற்கான நிதியுதவி கிடைத்ததும், பேசாமொழி விரைவில் உங்கள் கைகளில் தவழும்…

நிதியுதவி கொடுக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236

Series Navigationஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி – அத்தியாயம்-2 பகுதி-2 பிருந்தாவனம்குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28