பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.

பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.

பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியரும் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான  பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா இம்மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை. 5.30 மணிக்கு சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புத்தக இல்லத்தில் நடைபெறவுள்ளது.

அமீரகத்தின் ஃப்ளின்ட் பதிப்பகத்தின்  நிறைவேற்று பணிப்பாளர் ஜாஃபர் சாதீக்கினால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வாழ்த்துரையை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் சிறப்புரையை வித்தக கவிஞர் பா.விஜய் அவர்களும் வழங்கியுள்ளனர்.

‘கலைமாமணி’ விகேடி பாலன் தலைமையில் நடைபெறவுள்ள  இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பிறைசூடன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.

புரவலர் டாக்டர் அல்ஹாஜ் அப்துல்கையூம் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்  வரவேற்புரையை திரைப்பட இயக்குனரும் விழா ஒருங்கிணைப்பாளருமான வேடியப்பன் நிகழ்த்துகின்றார். நூல்  அறிமுகத்தை  சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் வழங்க ,இயக்குனர் சிபி செல்வன் கவிஞர்  ஈழவாணி  ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

விழாவில் தென்னிந்திய திரையுலக முக்கியஸ்தர்கள், படைப்பாளிகள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். விழா நிகழ்ச்சிகளை  கவிஞரும் அறிவிப்பாளருமான எஸ்.ஜனூஸ் தொகுத்து வழங்குகின்றார்.

1 Asmin-Option5

Series Navigationசீதாயணம் நாடகம் -10 படக்கதை -10புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 36. பார்​போற்றும் தத்துவ​மே​தையாக விளங்கிய ஏ​ழை……