பொருள்

Spread the love

பொருள்  கொண்டு 

மனிதம் மதிப்பீடு 
செய்யப்படும் 
வழிமுறையை 
பழக்கப்படுத்தி கொள்வதில் 
இனி சிக்கல் 
இருக்கபோவதில்லை.

மற்றவர்களை 
உதாரணம் கொண்டு 
உருவாக்கப்படவில்லை 
இந்நிலை. 
ஒரு நீடித்த பகலில் 
கைவிடப்பட்ட நம்பிக்கையை 
சுமந்து கொண்டு 
சுய நீர்மம் நிறைவில் 
மனதின் அழுத்தங்களை 
தாங்கி கொள்ள இயலாத நிலையில் 
என்னையும் ஆட்கொண்டது 
நாளை உங்களையும் தான் .

இனி 
உயிரினம் வாழ 
நிர்பந்தங்களை 
பட்டியல் கொண்டு 
மன குற்றங்களை 
மறைத்து மறந்து வாழவே 
உசித்தம் .
அது மிக எளிதான இயல்பு தான் .
                                  -வளத்தூர் தி.ராஜேஷ் 
Series Navigationசுனாமியில்…கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் – 2