மருத்துவக் கட்டுரை- தட்டம்மை ( MEASLES )

டாக்டர் ஜி. ஜான்சன்

தட்டம்மை ஒரு வைரஸ் நோய். இதற்கு ஆர்.என்.ஏ.பேராமிக்ஸோவைரஸ் ( Paramyxovirus ) என்று பெயர். இதற்கு தடுப்பு ஊசி போட்டபின்பு மேலை நாடுகளில் இந்த நோய் வெகுவாக குறைந்துவிட்ட்து. ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் இது இன்னும் அதிகமாகவே உள்ளது. வறுமையும், சுற்றுச் சூழல் சீர்கேடும், தடுப்பு ஊசி போடாமல் இருப்பதாலும் இந்த நிலை காணப்படுகிறது. தடுப்பு ஊசி போட்ட பின்பு வாழ்நாள் முழுதும் இந்த நோய்க்கான எதிர்புச் சக்தி உடலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நோய் நீர்த்துளிகள் ( droplet 0 மூலம் பரவுகிறது. நோயாளி இருமும் போதும் தும்மும்போதும் நீர்த்துளிகளின் வழியாக இந்த வைரஸ் அருகில் இருப்பவருக்கு தொற்றுகிறது. நோய் அறிகுறியான தோலில் சிவந்த புள்ளிகள் ( Reddish rashes ) தோன்று முன் 4 நாட் களும், அவை தோன்றிய பின்பு 4 நாட்களும் நோய்க் கிருமிகளின் தொற்றும் காலமாகும் ( infective period )..
இந்த வைரஸ் கிருமிகளின் அடைக் காலம் ( Incubation period ) 7 முதல் 18 நாள் வரையாகும். ஒருவரின் உளளினுள் இந்த கிருமிகள் நுழைந்ததும் அவை இந்த கால கட்டிடத்தில் நோய் அறிகுறிகள் உண்டுபண்ணாமல் உடலினுள் பெருகும் காலம் இது. அதன் பின்பே நோய் வீரியத்துடன் செயல்படும்.

அறிகுறிகள்

இந்த நோயில் இரண்டு விதமான தன்மைகள் கொண்ட அறிகுறிகள் காணலாம்.அவை வருமாறு.
* தோலில் சிவந்த புள்ளிகள் தோன்றுமுன் – காய்ச்சல், இருமல், சளி, சாம்பல் நிறத்தில் கன்னங்களின் உள்ளே புள்ளிகள்.
* தோலில் சிவந்த புள்ளிகள் தோன்றிய பின்பு – உடலில் தட்டையான புள்ளிகள் தோன்றுதல். இவை சில பகுதிகளில் ஒன்றாக சேர்ந்து கொப்புளங்களாக மாறலாம்.இவை முகத்தில் தோன்றி உடல் முழுதும் பரவும். இவை ஒரு வாரம் சென்று மறையும்.

பின்விளைவுகள்

ஆரோக்கியமான குழைந்தைகளுக்கு பின் விளைவுகள் இருக்காது. ஆனால் ஊட்டச் சத்து குறைந்த குழநதைகளுக்கும், வேறு நோய்கள் உள்ள குழநதைகளுக்கும் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணலாம். பின்வரும் விளைவுகள் உண்டாகலாம்:
வயிற்றுப்போக்கு
நிமோனியா
நடு காது அழற்சி
மூளை அழற்சி
இதய தசை அழற்சி
சில வேளைகளில் மூளை பாதிப்பு மோசமாகி மரணம்.

சிகிச்சை முறைகள்

நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை தரப்படும்.

தடுப்பு முறைகள்

9 மாதக் குழந்தைகளுக்கு தடடம்மை தடுப்பு ஊசி போடுதல்
MMR என்னும் தடடம்மை ( Measles ), புட்டாளம்மை ( Mumps ), ரூபெல்லா ஆகிய மூன்று நோய்களுக்கு எதிரான தடுப்பு ஊசியும் போடப்படுகிறது. சிலருக்கு இந்த வைரஸ் தொற்று உண்டாகும் வாய்ப்பு இருக்கும்போதும் இந்த தடுப்பு ஊசியைப் போட்டுக்கொள்ளலாம்.

( முடிந்தது )

Series Navigationதொடுவானம் 242. கிராம வளர்ச்சியில் கல்விஇராவணன்களே…..