மழைசிந்தும் குடை

 

பிச்சினிக்காடு இளங்கோ

(3.12.2018 காலை 9.30க்கு எம் ஆர்டியில்)

எப்போதும் அது

அழகாக இருக்கிறது.

இருவேறு வேளையிலும்

அது

அதன் அழகை

இழந்ததில்லை

 

வைரங்களைக்

காட்டும்போதும்

காதோரம்

சிவப்பாகி மறையும்போதும்

அழகுக்கு என்ன பஞ்சம்?

 

பார்க்கத்தவறியது

தவறல்ல

பார்த்தும்

ரசிக்கத்தெரியாதது குறை

ரசிக்கத்தெரிந்தும்

புதைத்தது குற்றமல்ல

அது பாவம்

 

அது

எப்போதும்

அழகாகவே இருக்கிறது

 

எந்தவேளையிலும்

அது

அதன் அழகை இழந்ததில்லை

 

அது

அழுதது அதிகம்

 

அது

துக்கத்திற்காக  அல்ல

துக்கம் க(லை)(ளை)ய;

பூக்களை ஈன்றெடுக்க

 

பெருமைகள் கண்டு

பூக்கத்தவறியதில்லை

 

அன்னாந்து பார்ப்பதோடு

நின்றுவிட்டால்

மழையாக விழுந்து

என்ன பயன்?

மண்ணாக இருந்து

என்ன பயன்?

சிலிர்க்காதுபோனால்

மண்ணன்றி வேறென்ன?

எனினும்

அது

நிலத்தை வீணாக்குவதில்லை;

வீணாக விடுவதில்லை.

 

அதன்

அழகு அழகுதான்

 

Series Navigationதுணைவியின் இறுதிப் பயணம் – 3What, if born a girl? எனும் ஆங்கில நாவல் வெளியீடு