மாஞ்சா

சத்யானந்தன்

 

காற்றாடிகள் வெறும்

காட்சிப் பொருள்

உங்களுக்கு

 

அதனாலேயே

மாஞ்சாக் கயிறு உங்கள்

புகார்ப் பட்டியலில் மட்டும்

 

பட்டம் விடுவதில்

வீரமும் போட்டியும்

துண்டித்தலும்

தனித்து மேற்செல்லுதலும்

மாஞ்சாவன்றி சாத்தியமேயில்லை

 

நீங்களோ என்

காத்தாடியின்

வெற்றி பற்றி

நான் பேசத் துவங்கினாலே

மாஞ்சா செய்த​ காயங்கள்

பற்றி புலம்பத் துவங்குகிறீர்கள்

 

வீரத் துக்கும் காற்றாடிக்கும்

விளையாட்டுக்கும்

மட்டுமல்ல நீங்கள்

எனக்கும்

அன்னியமே

Series Navigationவாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்மனக்கணக்கு