மார்கழி காதலி

Spread the love

மார்கழி பனி நீ வெளியே வரும்வரை
உன் வீட்டு வாசலில் காத்திருந்து
உன்னை தொட்டு குளிர் காய்ந்து கொள்ளும்

வெட்டைஇல்லாமல் வாசல் தெளித்தை கண்டு
மார்கழி பனி வெட்கி தலை கவிழும்

நீ உன்வீட்டு வாசலில் போடும் மாக்கோலத்தை கண்டு
கதிரவன் கிழக்கு வாசலில் போட்ட கோலங்களை
கலைத்து விடுவான்

நீ உன் வாசலில் இட்ட கோலம்
பூமாதேவிக்கு வைக்கப்பட்ட திலகமாகும்

நீ வைக்கும் செம்பருத்தி பூவுக்காக
சாணி பிள்ளையார் கோலத்தின் நடுவில்
அழகாக அமர்ந்து அருள் வழங்கிறார்

நேற்று வைத்த சாணி பிள்ளையார்
தட்டப்பட்டு காய்கிறார் வெயிலில்
அவரை ஆற்றில் விடும் காணும் பொங்கலை
எதிர்நோக்கி பொருநை ஆறும்
உன் பாதம் தொட காத்திருக்கிறது

Series Navigationபஞ்சரத்னம்துளிதுளியாய்….