மீன் குழம்பு

மீன் குழம்பு என்றாலே
எல்லோருக்கும் பிடிக்கும்,
மீன் குழம்பை புளிப்பா காரசாரமா
சுள்ளுன்னு வைக்கணும் என்பார்கள்.
கர்ப்பிணி பெண்கள்,
ஜுரம் வந்து வாய் கசந்தவர்கள்,
பியர் குடித்தவர்கள்,
என எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும்,
மீன் உணவு ஒன்று தான் வெயிட் போடாதது,
எவ்வளவு வேண்டுமானாலும்,
எந்த ஊர் போனாலும் சாப்பிடலாம்.
அதில் இது ஒரு ஈசியான முறை.
மீனை கடைசியில் தான் போடணும்
இல்லை என்றால் குழைந்து விடும்.
தேங்காய் பவுடர் இல்லாதவர்கள்,
தேங்காய் பத்தை நான்கு
அரைத்து பால் எடுத்து ஊற்றவும்.
மீன் குழம்பிற்கு
பிளெயின் சாதம், இடியாப்பம்,
ரொட்டி,ஆப்பம்,தோசை,மைதா அடை,
பருப்படை என எல்லாம் பொருந்தும்.
காஷ்மீரி சில்லி சேர்ப்பதால்
காரம் இல்லாமல்,அதே நேரம்
நல்ல சிவப்பு கலராகவும் இருக்கும்.
அப்படித் தயாரித்த மீன் குழம்பை
இரண்டு நாள் வைத்து
சாப்பிட்டால் அதன்
சுவையே தனி தான்.

அந்த மீனை அப்படியே கடலிலே
விட்டிருந்தால் தன் பாட்டுக்கு
நீந்திக்கொண்டிருக்கும்.

– சின்னப்பயல் ( chinnappayal@gmail.com)

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண்மையின் உட்கரு (கவிதை -54)இந்தியா – ஒரு பெரிய அங்காடி தெருவாகுமா?