மீள் வருகை

This entry is part 8 of 12 in the series 10 ஜனவரி 2016

 

 

வெய்யில் முகத்தில்

சுட்டு

எழுப்பி விட்டது

 

குதிரையைத் தேடின​ விழிகள்

செங்குத் து மலையில் நேற்று எங்கோ

புரவி நின்று விட்டது

நினைவுக்கு வந்தது

 

இரவில் அவள் தென்பட​ மாட்டாள்

ஆனால் தேடி வருவதற்குள்

பொழுது சாய்ந்து விட்டது

 

அவளே ஒரு கனவோ?

இல்லை. நெஞ்சில் இருந் து

வாளை உருவி அவள் ஆற்றிய​

புண் தழும்பாயிருந்ததே

 

கவசங்களைக் கழற்றினான்

உடைவாளையும்

முன்கைக் காப்புப் பட்டைகளையும்

நெஞ்சில் தழும்பு இருந்தது.

 

கனவல்ல​

உடன் எதிர்ப்பட்டாள்

 

“ஆயுதங்களை நீக்கினால் தான்

நீ வருவாய் என்னும்

புரிதல் இப்போதே நிகழ்ந்தது”

 

“நான் ஒரு கனவு

மறுபடி வரமாட்டேன்

என​ ஏன் நினைத்தாய்?”

 

அவள் புன்னகையில்

மலை மூழ்கியது

 

Series Navigationபிரபஞ்ச மூலத் தோற்றம் விளக்கும் பெரு வெடிப்புக் கோட்பாடும் ஒரு புனைவு [Mirage] யூகிப்பே.தொடுவானம் 102- பழுதற்ற படைப்பு மனித உடல்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *