முற்றுபெறாத கவிதை

இன்னும் என் கவிதை
முடிக்கப்படவில்லை ….

ரத்தம் பிசுபிசுக்கும்
வலிமிகுந்த வரிகளால்
இன்னும் என் கவிதை
தொடர்ந்துகொண்டே இருக்கிறது …..

பதில் கிடைக்காமல்
விக்கித்து நிற்கையில்
கேள்விக்குறி ஒன்று
தொக்கி நிற்கிறது .

திடுமென நிகழ்ந்த
நிகழ்வொன்றில் ,
கண்களை அகல விரித்து
ஆச்சர்ய குறி ஒன்று
இடைசொருகப்படுகிறது ..!

ஏதும் சொல்லொண்ணா நேரங்களில்
வெறும் கோடுகளாய்
நீள்கிறது…….

புலம்பியது போதும்
என முற்றுபுள்ளி வைத்தேன் !

அதன் அருகிலேயே
மேலும் சில
புள்ளிகள் இட்டு
காலம் என் கவிதையை
தொடரச்செய்கிறது …..

கைவசம் யாரிடமாவது
முற்றுபுள்ளி இருக்கிறதா ?

–க. உதயகுமார்

Series Navigationஎன் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்புஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2