மொட்டுக்கள் மலர்கின்றன

Spread the love

இயற்கை மூடி வைத்த
மொட்டுக்கள் ஒவ்வொன்றும்
சிறுசத்தம்போட்டு உலகை
எட்டிப் பார்க்கின்றன
பூக்களாக…

பூவுலகின்
சிறுதூண்டலால்
அழகழகாய்
மலர்கின்றன
எழில் பூக்கள் – தம்
புறவிதழால்
புதுக் காற்றை
பிடிபிடித்தும்
பார்க்கின்றன…

வளிபோன போக்கில்
அசைந்தாடவும்
வாயின்றி சில வார்த்தை
இசை போடவும்
வான் போடும் மழை நீரில்
விளையாடவும்
வையத்தில் தேன் பூக்கள்
பூக்கின்றன.

ஒரு மொட்டு
மலரும் போது…
மெல்லப் பேசுகின்றது…
பேசும் விழிகளால்
புன்னகை பூக்கின்றது…
பூமிக்கு
வளையோசை கேளாமல்
காற்றிலே நடனம் ஆடுகின்றது…

ஜுமானா ஜுனைட், இலங்கை.

Series Navigationதமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்