யட்சன் – திரை விமர்சனம்

– சிறகு இரவிச்சந்திரன்
0
Yatchan-Movie-Review-300x229ஒரு ஆக்ஷன் கதையை காமெடி கலர் பொடி தூவி கலைந்த ரங்கோலி ஆக்கியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்.
“ தனி ஒருவன்” பரபரப்பை எதிர்பார்த்து போகும் ரசிகனுக்கு ஏமாற்றமே மிஞ்சும். தொடராக வரவேற்பை பெற்ற, சுபாவின் விகடன் கதை, வீணடிக்கப்பட்டிருக்கிறது!
கொலைக் கும்பல் துரத்தும் சின்னா; சினிமா ஆசை துரத்தும் கார்த்திக். இருவரும் இடம் மாறினால் ஏற்படும் குழப்பமே கதை.
கொடூர தாதாக்கள் காமெடி பீசாக வலம் வருவது குமட்டுகிறது.
கார்த்திக் பாத்திரத்திற்கு கிருஷ்ணா பரவாயில்லை. ஆனால் ரவுடி சின்னா பாத்திரத்தில் ஆர்யா பொருந்தவேயில்லை. இனி அவர் சரக்கடிப்பதும் சைட் அடிப்பதுமாக நிறுத்திக் கொண்டால் நிலை பெறுவார்.
கொலைகளைச் செய்யும் கொடுர வில்லனாக அடில் ஹுசைன். அந்த குரல் தான் அவர் சாயம் வெளுக்கக் காரணம்.
இடி தாக்கியதால் எதிர்காலத்தை கணிக்கக் கூடிய அற்புத சக்தி பெற்ற பெண் சுவேதாவாக தீபா சன்னதி. அவரை விட வாயாடி தீபாவாக ஸ்வாதி ரெட்டி பட்டையைக் கிளப்புகிறார்.
சென்ட்ராயன், தம்பி ராமையா, பொன்வண்ணன் என எல்லோருமே காமெடி பாத்திரங்கள். அதனால் ஆக்ஷன் ப்ளாக்கில் வரும் க்ளைமேக்ஸ் சண்டைக்குக் கூட சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள் பார்வையாளர்கள்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் குறையில்லை. காட்சிகளின் அடர்த்தியின்மைக்கு அவர் என்ன செய்வார் பாவம்.
இசை யுவன் என்பது பின்னணி இசையில் பரவலாக தெரிகிறது. பாடல்களில் நஹி! கடைசி பாட்டில் நடுவில் வரும் வரிகளான “ இன்னும் என்ன அழகே “ வயலின் இசையுடன் கவர்கிறது. படம் முழுவதும் வயலினை தேடி கடைசியில் கண்டெடுத்திருப்பார் போலிருக்கிறது யுவன்.
ஏற்கனவே ‘சர்வம்’ என்றொரு படத்தை ஆங்கிலத்திலிருந்து உருவி ஆர்யாவோடு கை கோர்த்து மண்ணைக் கவ்விய விஷ்ணுவர்த்தன், இம்முறை நல்ல பெயரெடுத்திருக்கும் எழுத்தாளர்கள் சுபாவின் முகங்களிலும் சாயம் பூசியிருக்கிறார். இவருக்கு அடுத்த படம் தர “ தல “ யோசிப்பார் என்பது நிதர்சனம்.
0
நச் கமெண்ட் : யட் ‘சே ‘ ன்
0
நியூஸ் மொமெண்ட் : தீபா சன்னதி விஷ்ணுவர்த்தனுக்கு படத்தோட ரிசல்டை சொல்லலை போலிருக்கு மாம்ஸ்!
0

Series Navigationசைனா 2020 ஆண்டுக்குள் முதன்முறையாக நிலவின் மறுபுறத்தில் தளவுளவியை இறக்கத் திட்டமிடுகிறது.அவன், அவள், அது…!? (முதல் அத்தியாயம் )