வழி தவறிய கவிதையொன்று

நடுச்சாமத்தில்

உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையே

மனம் ஓடும் எல்லா இடங்களுக்கும்

அறியா வெளிகளுக்கும்.

 

‘டொக் டொக் டொக்’

யாரது? உள்ளம் கேட்கும்

 

‘யார் நீ?’

உரத்த குரலில் வினவுகிறேன் நான்.

 

‘நான். வந்து… வந்து…

வழி தவறிய கவிதையொன்று.

கதவைக் கொஞ்சம் திறக்க இயலுமா?’

 

கவிதையொன்றாம்.

வழி தவறி விட்டதாம்.

திறப்பதா கதவை?

எனது கதவைத் திறக்காது விடின்

வழி தவறிப் போகும் கவிதை.

கதவைத் திறப்பின்….

வழி தவறிப் போவேன் நான்.

 

பரவாயில்லை வருவது வரட்டும்.

மெதுவாகக் கதவைத் திறந்து

கவிதை உள்ளே வர விடுகிறேன்.

எப்படியும் எந்நாளும்

எனதிதயம் வழிதவறிக் கொண்டுதானே இருக்கிறது

 

டீ.திலக பியதாஸ

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

 

Series Navigationஇந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..