விசித்திரம்

மார்கழி பனிப் புயலில்

மெழுகுவர்த்திகள்

அணைந்து போகின்றன…

எங்கும் குளிர்

எதிலும் இருள்

அங்கு –

மின்னல் கீறுகள்தான்

மாயமான வெளிச்சங்கள்..

சுவாச மூச்சுக்கள் தான்

சூடான போர்வைகள்..

வீதி விளக்குகளும்

விகடமாமக் கோபித்துக்

கொள்கின்றன..

மின் விசிறிகளும்

சொல்லாமலே அணைந்து

போகின்றன..

மார்கழிப் பனிப் புயலில்

எவைதான் எஞ்சுகின்றன…?

உறக்கங்கள் மட்டும் தான்!

கனவுகளைத் தேடி ஆன்மாக்கள்

புறப்பட்டுச் சென்றுவிட்டன.,

கார்கால மின்னல்

வெளிச்சங்களில்

எப்படித்தான்

தேடிப்பார்க்கப்

போகின்றனவோ…?

ஜுமானா ஜுனைட், இலங்கை.

Series Navigationஎங்கே போக விருப்பம்?நினைவுகளின் சுவட்டில் – (82)