‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில்

தகவல் குறிப்பு

திண்ணையில் பிரசுரமான ‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வடிவம் கண்டு வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில் நடக்கிறது. வாசக நண்பர்கள் அவசியம்  கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன். (invite enclosed)

 

அரசூர் வம்சம் மற்றும் அதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் என்ற என் இரு நாவல்களைப் பிரசுரம் செய்த திண்ணைக்கு பிரத்யோகமாக நன்றி சொல்ல வேண்டும். அவ்வப்போது பல காரணங்களால் இடைவெளி விட்டு நாவலை வளர்த்துப் போய், எழுதி அனுப்பிய அத்தியாயத்தில் திருத்தம் போடச் சொல்லி நச்சரித்து எல்லாத் தொல்லையும் நான் கொடுத்தாலும் திண்ணை ஆசிரியர் பொறுமையின் சிகரமாக அவற்றை எடுத்துக் கொண்டு நாவல் பிரசுரமாக உறுதுணையாக நின்றார். திண்ணைக்கு எப்படி நன்றி சொல்ல? அடுத்த அரசூர் நாவல் ‘அச்சுதம் கேசவம்’ திண்ணையில் விரைவில் தொடங்கி, மேலும் தொல்லை கொடுத்துத்தான்.

 

அன்போடு

இரா.முருகன்

 

vishwaroopam invite revised

Series Navigationஇரண்டு ஏக்கர் நிலம்- சிறுகதைஎம். ஏ. சுசீலாவின் தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.