வெறுமை

Spread the love

உச்சி வெயிலில்
வெற்றுடம்புடன்
மருள் பார்வையில்
மயங்கி புடவையின்
நுனி பற்றி இழுத்தும்
கவனம் கார் கண்ணாடியிலும்
சிக்னல் விளக்கிலும் …

கைசேர்த்த காசுகள்
ஒரு பாலாடை பாலுடன்
சிறிது மதுவும் ஊற்றி
மயக்கத்தை உறுதிபடுத்தி
வாகன ஊர்வலத்தில்
இடைசெருகி

மாலை நேர
கணக்கு முடித்து
கமிஷன் வாங்கி
சேயை அதன் தாயிடம்
சேர்க்கையில் கண்ணில்
நிழலாடியது தன்னை
விற்றுப்போன
தாயின் முகம் …..

– கவிப்ரியா பானு

Series Navigationஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)