ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 22 பிற்காலக் கவிஞர்களின் ஆக்கம் பற்றியப் புரிதல். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம்.

Spread the love

 

1882-ம் ஆண்டு ஸ்காட்லாந்துக் கிறித்துவ மதப் பிரச்சாரச் சபையைச் சார்ந்த அருட்தந்தை.ஹாஸ்டி என்பவர் வரம்பு மீறி ஹிந்து மதத்தைப் பற்றி விமர்சனங்களை  தி ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் எழுதி வரத்  தொடங்கினார். பங்கிம் சந்திரச் சட்டர்ஜி இந்தக் குற்றச் சாட்டுக்களை எதிர்ப்பதென்று முடிவு செய்தார். ராம் சந்தர் என்ற புனைப் பெயரில் அதே வேகத்துடன் திருச்சபையின் குற்றச் சாட்டுகளுக்கு அதே செய்தித் தாளில் மறுப்புத் தெரிவித்தார். அது வரையில் பங்கிம் வெறும் இலக்கியவாதியாகவே கருதப் பட்டார். இதன் பிறகு அவர் ஒரு மிகப் பெரும் ஆன்மீக வாதியாக மாறினார். தனது கடைசிக் காலங்களை ஹிந்து மதத்தை அலசி ஆராய்வதற்கே செலவிட்டார். அவருடைய மகாபாரத ஆராய்ச்சிக் கடுமையானது. ரசிகமணி டி.கே சிதம்பரநாத முதலியார் கம்ப இராமாயண ஆராய்ச்சியின் மூலம் பிற்சேர்க்கைப் பாடல்களைக் கண்டு விளக்கியது போல பங்கிமும் மகாபாரதத்தில் உள்ள பிற்க்கேர்க்கைப் பாடல்களைக் கண்டு விளக்கும் அளவிற்குப் புலைமை படைத்தவர். அது மட்டும் இல்லை மகாபாரதம் பல்வேறு காலக் கட்டங்களில் இரண்டு மூன்று கவிஞர்களால் இயற்றப் பட்டது என்று அடித்துச் சொல்லும் அளவிற்கு அவருடைய மகாபாரத ஆராய்ச்சி ஆழமானது. இவருடைய புலைமை காரணம்மாக இந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தை நாம் கவனத்துடன் படிக்க வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் கிருஷ்ணர் குறித்த ஒரு தெளிவிற்கு நம்மால் வர இயலும்.

இதுவரை நமது ஆராய்ச்சியின் நோக்கம் ஒர் அமைதியான கடலைப் போல விளங்கியது. இனி ஒரு புயல் சூழ்ந்தக் கொந்தளிப்பாக மாற உள்ளது. இனி மகாபாரதம் முற்றிலும் வேறு ஒரு கவிஞனின் கைகளில் சிக்கிக் கொள்ள இருக்கிறது. இந்தக் கவி மகாபாரதத்தை மிகப் பெரிய அளவில் கட்டமைக்கத் தொடங்கியுள்ளார். இந்தக் கவி ஸ்ரீ கிருஷ்ணரின் பாத்திரத்தை முடிலும் வேறு மாதிரியாக மாற்றி அமைத்து விட்டார். எவருடைய பாத்திரப் படைப்பில் மேன்மையும் கம்பீரமும் வெளிப்பட்டதோ அது இப்பொழுதுக் குறுகிய மனப்பான்மையும் நேர்மையற்றதாகவும் சித்தரிக்கப் பட உள்ளது. எந்தப் பாத்திரப் படைப்பில் பேரன்பு நிறைந்திருந்ததோ அதில் இப்பொழுது குரூரம் தோன்றத் தொடங்கி விட்டது. எது எளிமையாய்த் தோன்றியதோ அது இப்பொழுது சிக்கல் நிறைந்ததாக மாறத் தொடங்கி விட்டது. எது நேர்மையானதாக சித்தரிக்கப் பட்டதோ அது இனிமேல் அது இனிமேல் பொய்மையும் வெளிவேஷமுமாகச் சித்தரிக்கப் பட உள்ளது. நீதியும் தர்மமும் அரசோச்சிய இடத்தில் இனி அநீதியும் அதர்மமும் கோலோச்சப் போகின்றன. இந்த இரண்டாம் தளக் கவிஞனால் ஸ்ரீ கிருஷ்ணர் நிறைய தவறுகளைச் செய்ய இருக்கிறார்.

முதலில் இது ஏன் இவ்வாறு நிகழ வேண்டும்? இந்த இரண்டாம் தளக் கவிஞன் ஒரு மோசமானக் கவிஞனாக பரிமளிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டாம் தளக் கவிஞனின் கவித் திறம் மகாபாரதம் முழுவதிலும் பளிச்சிடுகிறது. மேலும் அவர் தர்மத்திற்குப் புறம்பாக எதையும் எழுதிவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தும் இந்த இரண்டாம் தளக் கவிஞன் எதற்கு ஸ்ரீ கிருஷ்ணரை எதற்கு இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விட வேண்டும்? இதற்கு நிஜமாகவே ஒரு நல்ல காரணமிருக்கிறது.

முதலில் நமக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு கடவுளின் அவதாரமாக மூல நூலை எழுதிய மகாபாரதக் கவிஞன் சித்தரிக்கவில்லை என்பது தெரியும். இந்த முதல் நிலைக் கவிஞனின் சித்தரிப்பில் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு முறை கூட தன்னைகே கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அவர் தன்னை ஒரு மானுடனாகவே பாவிக்கிறார்.மனித சக்த்திக்கு உட்பட்ட செயல்களை மட்டுமே ஆற்றுகிறார். எனவே இந்த மூல நூல் இயற்றப் படும்பொழுது  ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு அவதார புருஷனாக அறியாப் பட வாய்ப்பில்லை என்று நமக்குத் தோன்றுகிறது.எனவே மகாபாரதத்தின் இந்த முதல் பதிப்பு அதுவரைப் புழக்கத்தில் இருந்தஅல்லது அதுவரையில் கிடைத்த செய்திகளின் தொகுப்பு என விளங்கிக் கொள்ளலாம். மகாபாரதம் இரண்டாவது முறை மாற்றி எழுதப் பட்ட சமயம் ஸ்ரீ கிருஷ்ணர் சாகசம் நிறைந்த வீர புருஷன் என்பதும் தேவீகத் தன்மை பொருந்திய மகா புருஷர் என்பதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயமாக இருக்க அவேண்டும்.எனவே இரண்டாம் முறையாக மகாபாரதத்தை மாற்றி எழுதும் கவிஞன் ஸ்ரீ கிருஷ்ணரை கடவுளின் அவதாரமாகவே மாற்றி விடுகிறான்.

இந்த இரண்டாம் தளக் கவிஞனின் புனைவுக்கு ஏற்ப ஸ்ரீ கிருஷ்ணர் கூட தான் ஒரு தெய்வீகத் தனமையுடையவர் என்பதை உணர்ந்து அதனைப் பிறகு வெளிப்படுத்தவும் தொடங்குகிறார்.

இந்த வேற்றுக் கவிஞர் இத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. இவர் கடவுளின் தன்மையை ஆராய்ந்து கொண்டே செல்கிறார். அவருடையச் சிக்கலான குனாதிசியங்களுக்கு விளக்கங்களைத் தொடங்குகிறார். இறைவன் அத்தனை சக்தி படைத்தவர் என்றால் ஏன் அவரால் உலகில் உள்ள துன்பங்களை எல்லாம் போக்க முடியவில்லை? ஐரோப்பிய அறிஞர்களுக்கு இந்தக் கேள்வி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு கேள்வி அவர்களை முற்றிலும் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. இது வரையில் கடவுள் என்பவர் கருணை மிக்கவர் என்று நம்பிக் கொண்டிருந்தனர். தனது பொங்கி வழியும் பரிவின் காரணமாகவே இந்த உலகைப் படைத்தார் என்று நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் தான் படைத்த உயிரினங்கள் எவ்வித இன்னல்களுக்கும் ஆளாகக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார் என்றும் நம்பிக் கொண்டிருந்தார்கள். அப்படி இருந்தும் இந்த உலகத்தில் எதற்காக இத்தனை தீய நிகழ்வுகள்?

இந்த வினா மேலை நாட்டினரை திணற அடித்ததைப் போல் இந்தியர்களை திணற அடிக்க முடியவில்லை.ஏன் என்றால் நல்லது கேட்டது நிறைந்த உலகில் கடவுள் அரவநித்துச் செல்வார் என்று ஒரு ஹிந்துவிற்குத் தெரியும். இரண்டாம் தலகவிஞனுக்கு இந்தத் தத்துவத்தை விளக்க ஆர்வம் மேலிட்டிருக்க வேண்டும். இந்துக்களைப் பொறுத்தவரையில் இந்த பிரபஞ்சம் முழுவதும் அவனுடையப் படைப்பு என்றும் இந்த உலகம் அவனுடைய விளையாட்டு மைதானம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.இந்த உலகம் உண்மையும் பொய்யும் நிறைந்தது. ஆனால் இறைவன் அவற்றை பேதப் படுத்திக் காட்டவில்லை.அவர் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பதால் எதிலும் பேதம் காட்டாதவராக இருக்கிறார். அவர் நடுநிலையாளர். அனைத்து தாவர ஜங்கமங்களின் உயிர் நாடி எதுவும் அது தீமையாக இருப்பினும் இறைவனுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. நன்மை என்பது தீமை என்பதும் நமக்குத் தெரியும் மாயத் தோற்றங்களே.

உண்மையும் பொய்யும் ஆகிய இரண்டின் மூலஸ்தானம் இறைவன் என்றாகும்பொழுது விஷ்ணுபுராணத்தை பாடிய கவிஞன் காளிங்கன் என்ற பாம்பின் மூலம் ஒரு கேள்வியை முன் வைக்கிறான். ” அனைத்து ஜீவராசிகளையும் படைத்த நீதான் என் போன்ற பாம்புகளையும் படைத்தாய். என்வவேதான் நான் விஷமுள்ளவனாக இருக்கிறேன்.”

இதே போலவே பிரஹலாதன் விஷ்ணு புராணத்தில் பகவானை இவ்வாறு ஆராதிக்கிறான். “ நீயே ஞானம் நீயே அஞ்ஞானமும் ஆவாய். நீயே சத்தியம்; நீயே அசத்தியமும் ஆவாய். நீயே அமிர்தம்; நீயே விஷமும் ஆவாய்.”

கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு குறிப்பிடுகிறார். “ நற்குணங்கள், அதிகாரம்,வன்மம் போன்றவைக் கூட என் தன்மைகளே.இந்தத் தன்மைகளுக்கு நான் கட்டுப் படுவதில்லை. அந்தத் தன்மைகள்தான் எனக்குக் கட்டுப் படுகின்றன.. மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் பீஷ்மர் ஸ்ரீ கிருஷ்ணரை இவ்வாறு துதிக்கிறார்.  ” நித்திய தூய்மைக்கு என் வந்தனங்கள்; நற்குணங்களின் தொற்றாமாக விளங்கும் பகவானுக்கு என் வந்தனங்கள்” அவர் மேலும் ஸ்ரீ கிருஷ்ணரை ஆயிரம் கோடி ஆசைகள் உடையவர் என்றும், அச்சம் தரக் கூடியவர் என்றும், பிரத்யட்சமான கொடூரம் நிறைந்தவர் என்றும் புகழ்கிறார். இதே போன்ற ஆயிரக்கணக்கான பல்லாண்டுகளை இது போன்ற ஹிந்துக்களின் புனித நூலகளிலிருந்து எடுத்தக் காட்ட முடியும். ஹிந்துக்களின் இத்தகைய நிலை மகாபாரதத்தின் இரண்டு தள கவிஞர்களின் ஆக்கங்களிலும் உட்புகுந்துள்ளது

இக்காலத்தில் ஒரு படைப்பு புத்தகமாக வெளி வரும்பொழுது அதனை இயற்றியது மற்றும் இயற்றியவர் பற்றியக் குறிப்புகள் நமக்கு அந்தப் புத்தகதிலேயேக் கிடைக்கின்றன. ஆனால் பநேடுன்காலத்தில் ஒரு படைப்பினை உருவாக்கும் ஆசிரியர் எந்த இடத்திலு இன்னார் எழுதினர் போன்ற குறிப்புகளை வைப்பதில்லை. அந்த மூல நூலை ஆராய்வதன் மூலமே இந்தப் பகுதி இவரால் எழுதப் பட்டது இந்த வருணனை இந்த ஆசிரியரைச் சேர்ந்தது என்று நம்மால் தரம் பிரிக்க முடியும். ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் மூல வரிகளைக் கண்டு பிடிக்க மேற்கே ஒரு  அறிவுஜீவிகளின் கும்பல் பல ஆராய்ச்சிகளை செய்து பக்கம் பக்கமாய் எழுதிக் குவித்துள்ளது. நாமும்( அதாவது இந்தியர்களாகிய நாமும்) மிகவும் சிரமப் பட்டு அவற்றையெல்லாம் கிரகித்துக் கொண்டு ஷேக்ஸ்பியரின் படைப்பின் மர்மங்களிக் கண்டு அனுபவிக்கிறோம். இவற்றிற்கு நாம் காட்டும் அக்கறையை நாம் ஒரு எல்முனையாவது நமிடையே உள்ள மகாபாரதத்தை ஆராய்ந்து அவற்றின் மூலம் எது இடைச் செருகல் எது, தேவையற்றவை எடு என்பதை அறிய முயற்சிப்பதே இல்லை. இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் விஷய ஞானம் உள்ளவர்கள் மகாபாரதத்தை நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல முன்வந்தாலும் அவர்களுக்கு நாம் செவி கூட மடுப்பதில்லை.

இறைவன் சர்வவியாபி. அனைத்தும் அவனுள் அடக்கம்.அவனே ஞானம் அவனே அஞ்ஞானம். அவனே அறிவு; அவனே அறியாமையும்.அவனே தர்மம்: அவனே அதர்மமும். இருப்பினும் நல்ல விஷயங்களான ஞானமும் , சத்தியமும் , தர்மமும் அவனிடமிருந்து கிளைத்து எழுந்தன என்பதை ஏற்றுக் கொள்ளும் மனம் கேட்ட குணங்களான அஞ்ஞானமும் வன்மமும், குரூரமும் அவனிடமிருந்துதான் தோன்றின என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. நாம் அவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த நிலைப் பாட்டினை மகாபாரதத்தின் இரண்டாம் தள ஆசிரியர் நன்கு  உணர்ந்து வைத்திருக்கிறார். நவீன வானவியல் நிபுணர்கள் நாம் சந்திரனின் ஒரு பகுதியை மட்டும்தான் காண முடிகிறது என்கின்றனர்.*. சந்திரனின் அடுத்தப் பக்கம் நம் கண்களுக்குப் புலப்படாமலேயே உள்ளது. அதைப் போலவே மகாபாரதத்தின் மறு பதிப்பை இயற்றிய இரண்டாம் தளக் கவிஞன் நாம் இதுவரையில் கடவுள் என்று நம்பிக் கொண்டிருந்த கருத்துருவாக்கத்தின் அடுத்தப் பக்கத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.. ( ஒரு வானவியல் நிபுணர் நமக்கு சந்திரனின் அடுத்தப் பக்கத்தைக் காட்ட முயற்சிப்பது போல }

ஜயத்ரதனைக் கொல்லும் பொழுது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிழை செய்துள்ளதாகக் கூறுவதன் மூலம் பிழைகளும் இறைவனிடமிருந்தே தோன்றியது என்பதை நிறுவ முற்படுகிறார். கடோத்கஜனின் மரணத்தின் மூலம் அறிவீனமும் இறைவனிடமிருந்துதான் தோன்றியது என்பதனை நிறுவ முயல்கிறார். துரோணரை அழிக்கும்பொழுது அசத்தியமும் அவரிடமிருந்து தோன்றியது என்பதனை நிறுவ முற்படுகிறார். துரியோதனனை அழிக்கும்பொழுது அநீதியும் பகவானிடமிருந்தே தோன்றியது என்பதனை நிறுவுகிறார்.

——————–

Series Navigation