​எப்படி முடிந்தது அவளால் ?

 
Inline image 1
மாற்றங்கள் செய்ய எண்ணி
மறந்து போன நாழிகையும்
மாற்றத் திற்குள் துவண்டு

அடையாள மற்று

ப்​

போனதையும்

மீண்டும் புதுப்பிக்க எண்ணி
தோல்வி கண்ட
தருணம் ஒன்றில்
அவளைச் சந்தித்தேன்

பால்யம் கடந்த பின்னும்
வாலி

​ப​

மங்கையாய்
சலிக்கா

 து​

முழங்காலில் ஊர்ந்திட

எப்படி முடிந்தது அவளால் ?

உள்ளத்துக் குமறல்களை
உலகுக்கு மறைத்து
சிரிப்பொலி பரப்ப
எப்படி முடிந்தது அவளால் ?

பின் நின்றுப் பார்க்கும் கண்களையும்
விச்சுக் கொட்டும் உதடுகளையும்
சலிக்காமல் ஏற்றிட
எப்படி முடிந்தது அவளால் ?

வாழ்க்கையின் எதார்த்தத்தை
சிரித்தபடி முடமாய்க்
கடந்து போக
எப்படி முடிந்தது அவளால் ?

சிறிதும் சலனமற்ற இதயத்தில்
விழியோரம் கசியும் கண்ணீரை
யாரும் பாராது சுண்டிவிட
எப்படி முடிகிறது அவளால் ?
வா என்றேன்
உள்ளத்துக் கூட்டை விட்டு
பரந்து விரிந்த இவ்வுலகு
உன்னுடையது என்று சொன்னேன்.

அகல விரிந்த பார்வையில்
நன்னம்பிக்கை தோய்த்தெடுத்து
தன்னடையில் வெற்றி

​ ​

கண்டாள்.
அவள் என் சிநேகிதி.

Series Navigationஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் – 10 சுபத்ராவின் ஹரணம்டௌரி தராத கௌரி கல்யாணம்….! -26