
மக்கள் உரிமைகளை பற்றி மறந்து போன இந்திய அரசின் வெளியுறவு கொள்கைகளுக்கும், வியாபார உலகின் நன்மைகளை குறிவைத்து மேற்கொள்ளபடும் இந்திய மத்திய அரசின் கொள்கைகளுக்கும், ராஜிவ் காந்தியின் இழப்புக்கு பழி வாங்கும் நோக்கில், ஒரு இனபடுகொலைக்கும் உறுதுணையாக செயல்பட துணிந்துவிட்ட, காந்தியத்தை என்றோ மறந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் அதிமுக தலைமையிலான அரசு நிறைவேற்றி இருக்கும் இந்த தடை (economic sanctions on SriLanka) போற்ற தக்கதாகும்.
30 இலட்சம் (3 million) ஈழ தமிழர்கள் அகதிகளாகவும், 200,000 தமிழர்கள் கடந்த 20 ஆண்டுகளில் போரினால் இறந்து பட்டும், 50,000 தமிழர்கள் ஒரே வாரத்தில் கொன்று குவிக்கபட்டும், எந்த ஒரு கண்டிப்பையும் தடைகளையும் இலங்கையின் மீது தீவிரமாக செலுத்தாத உலக நாடுகள் சபைக்கும் கண்டணம் தெரிவிக்கும் வகையில் உள்ளது இந்த பொருளாதார தடை தீர்மானம் என்று சொல்வது மிகையாகாது. இலங்கையுடன் பொருளாதார, வியாபார, போர்த்தளவாட வணிகங்களில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுக்கும் அந்நாட்டினை, (இந்தியா உட்பட) சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்த தடை செல்லுபடியாகும். குறிப்பாக, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் இலங்கையில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மிகவும் கண்டனதிற்குரியதாகும். இந்தியா என்பது காங்கிரஸ் கட்சியோ, பாரதிய ஜனதா கட்சியோ, அல்லது ஒரு சில பத்திரிக்கை ஆசிரியர்களோ மட்டும் அல்ல. பல்வேறு தேசிய மொழி இனங்களின் ஜனநாயக கூட்டமைப்பாகும்.
தமிழகம் இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றாகும். இந்தியாவில் தனது வியாபார, தொழில் நிறுவனங்களை நிறுவவும், முதலீடும் செய்ய விரும்பும் எந்த ஒரு அரசும், வணிக நிறுவனங்களும் இலங்கைகுறித்து தனது கொள்கைகளை மாற்றி, ஈழ தமிழர்கள் சுய நிர்ணய உரிமைக்கு வழிவகுக்கும் வகையில் இலங்கையை நிர்ப்பந்தம் செய்யாமல், இலங்கையுடன் உறவு கொள்ளுமாயின், அந்த நிறுவனங்களை இந்திய-தமிழகத்தில் தடை செய்யவும் மக்கள் குரல்கள் ஒலித்தோங்கும்.
- இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்
- சாம்பல்வெளிப் பறவைகள்
- என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை
- நாதம்
- சாகச விரல்கள்
- 5 குறுங்கவிதைகள்
- அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
- நினைவுகளின் சுவட்டில் – (70)
- எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து
- காலாதி காலங்களாய்
- உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
- சின்னாண்டியின் மரணம்
- விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?
- முதுகெலும்பா விவசாயம் ?
- கட்டங்கள் சொற்கள் கோடுகள்
- இரண்டு கவிதைகள்
- தியாகச் சுமை:
- ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்
- புள்ளி கோலங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
- எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)
- கறுப்புப்பூனை
- பழமொழிகளில் பணம்
- இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்
- விக்கிப்பீடியா – 3
- உறவுகள்
- தனித்திருப்பதன் காலம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா
- முதுகில் பதிந்த முகம்
- ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்
- கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”
- இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….
- அரச மாளிகை ஊக்க மருத்துவர்
- ஒற்றை எழுத்து
- சென்னை வானவில் விழா – 2011
- மாலைத் தேநீர்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40
- தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா
- 2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4
- தற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:
- காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை
- அறிவா உள்ளுணர்வா?
- இப்போதைக்கு இது – 2
- யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்