தற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:

This entry is part 42 of 46 in the series 19 ஜூன் 2011

1. “ நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்துப் போன காலம் உண்டு. நீரை அள்ளி அள்ளி குடித்திருக்கிறோம். நொய்யல் ஆற்று மணலில்  அரசியல் கூட்டங்கள் நடப்பது ஒரு சாதாரண நிகழ்வாக  இருந்திருக்கிறது. திருப்பூர் மக்கள் உழைப்பிற்குப் பெயர் பெற்றவர்கள். அதுதான் உலக அரங்கில் பனியன் பெருமையை உயர்த்தியது. இன்றைக்கு 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணியைத்தரும் நகரமாக மாறியுள்ளதற்குக் காரணம் அந்த  உழைப்புதான்.  வந்தாரை வாழ வைத்த பூமியாக திருப்பூர் மாறியதற்குக் காரணம் குறுகிய காலத்தில் எந்த வகையான வெளிநாட்டு ஆர்டராக இருந்தாலும்  தூக்கம் இல்லாமல் உழைத்து சரக்கை விமானத்திலோ, கப்பலிலோ ஏற்றுமதி செய்து விடக்கூடியவர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள். திருப்பூரின் இன்றைய 10 லட்சம் மக்கள் தொகையில்  4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள்  பனியன் தொழிலாளர்களாக உள்ளனர் இவர்களில் பெரும்பகுதியினர் தமிழகத்தின்  தெற்கு மாவட்டஙகளிலிருந்து வந்தவர்களும், கேரளத்தினரும் என்ற  பழைய நிலையோடு ஒரிசா, பீகார், நேபாளத்தினரும் கணிசமாக உள்ளனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.  தற்போது திருப்பூருக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்பது நீண்ட காலமாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இருந்த தொய்வின் காரணமாகும். முன்பு படிக்காத உழைப்பாளிகள்  பனியன் உற்பத்தியாளர்களாக இருந்தனர். தொழில் நுட்பக் கல்வியும், மேலாண்மை படிப்பும்  கொண்ட இன்றைய                         2.
தலைமுறையினர் சுற்றுப்புறச்சூழலில் பிரச்சினைகளை கவனத்துடன் கையாளுகிறார்கள் .  அதிகப்படியான சுத்திகரிப்பு நிலையங்கள் சமீப காலங்களில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இது தாமதமானதுதான் என்பதை  நீதி மன்றத்தின் தீர்ப்பு சமீபத்தில் தெரிவித்திருக்கிறது. நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கை கூடி வருகிறது. தேர்தலை மனதில் கொண்டு தமிழக அரசும் , கட்சிகளும் செய்ல்படுவது 4 லட்சம் மக்களுக்கு ஆறுதல் தருவதாக இருக்கும். சாய்ப்பிரச்சினையை  அரசியல் கட்சிகளும் அரசும் சரியாக கவனிக்காமல் இருப்பதாக எழுந்துள்ள  பார்வை காரணமாக தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள  எண்ணம் துரதிஸ்டமானது என்று ஆசியல் கட்சிகள் திகிலடைந்து போயிருக்கிறார்கள். “ என்கிறார் திருப்பூரைச் சார்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.

திருப்பூரின் சுற்றுச்சுழல் பிரச்சினைகளைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை” நாவல்  திருப்பூரின்  சாயப்பிரசிச்னையையொட்டி எழுதப்பட்டு 1998ல் வெளியானது. ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம்    ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாகும்  அது . “ 15 ஆண்டுகளுக்கு முன் அந்த நாவல் எழுப்பிய சுற்றுச்சூழல் குறித்த தார்மீக்க்  கேள்விகள் இன்றைக்கும் எழுப்பப் படுவதன் அடையாளம் தான் நீதிமன்றத்தீர்ப்பும் சாயப்பட்டறைகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டது ஆகும். சாயம் குறித்த பிரச்சினைகள் இன்று உலகம் முழுக்க மனித உரிமைப்பிரச்சினைகளாக உருவெடுத்திருக்கும் நிலையில்   புதிய உற்பத்தியாளர் தலைமுறை கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகத்தின் அம்சங்களாக  சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கையாள்வதின் அடையாளமாகக் நிறைய சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிடுள்ளன.”

நவீன இலக்கியத்தின் அடையாளமான இவரின் “ கனவு” காலாண்டிதழ் இவ்வாண்டு இறுதியில்  25 ஆம் ஆண்டை தொடுகிறது என்பது பெரிய சாதனை.  ”கனவு” இதழில் இன்றைய முக்கிய படைப்பாளிகள் பலர் எழுதி உள்ளனர். பல முக்கிய   இளம் படைப்பாளிகளை   கனவு உருவாக்கியிருக்கிறது. கனவு முதல் 20 ஆண்டுகளில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு 700 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது. கனவு நடத்தி வரும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான  “ கதை சொல்லி”  நிகழ்ச்சிகள் முக்கியமானவை. 7 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 35 நூல்களை வெளியிட்டிருக்கும் இவரின் மூன்று குறும்படங்கள், சுமங்கலி திட்டம், குழந்தைத்தொழிலாளர் பிரச்சினை, சாயம் போன்றவாற்றை மையமாகக் கொண்டவை. திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளின் முக்கிய தளமாக விளங்குகிறது.
“ சென்னைக்கு அடுத்தபடியாக தற்கொலைகளின் விகிதம் அதிகமாக இருக்கும் நகரம் திருப்பூர் என்று சமீபத்தில்  எழுந்த சர்ச்சையையும் நடவடிக்கையையும் மீறி இப்போது முளைத்திருக்கும் சாயப்பட்டறைப் பிரச்சினையையும்  திருப்பூர் சரியாகவே கையாண்டு மீளும். கடினமான உழைப்பும், கொங்கு நாட்டின் விருந்தோம்பல் குணமும் கொண்டு வந்தாரை வாழ வைக்கும் திருப்பூரிலிருந்து தற்காலிகமாக தங்களின் சொந்த  ஊருக்கு செல்ல தயாராக உள்ள  ஒரு பகுதி மக்களின் நம்பிக்கை வீண் போகாது  என்பதற்கு இன்னும் மூடப்படாமல் இயங்கிகொண்டிருக்கும்   பெரும்பான்மையான பனியன் கம்பனிகள்     காட்டிடுகின்றன. தற்கொலைமுயற்சிகளில் பனியன் தொழில் இருப்பதாய் காட்டப்படுவது துரதிஸ்டமே  ”
மகாபாரதப் போருக்கு முன்னோட்டம் திருப்பூரில்தான் நிகழ்ந்ததாக ஆராய்ச்சிகள் உண்டு.  விராடபுரமான தாராபுரத்திலிருந்து துரியோதனன் பிடித்துச் சென்ற மாடுகளைத் தடுத்தி நிறுத்தினான் அர்ஜீனன். அவனுடன் போர் செய்து வெற்றி பெற்று அர்ஜீனன்   மாடுகளைத் திருப்பி  அனுப்பியதால்  திருப்பூர் எனப் பெயர் வந்ததாம்.     25 சதுர கிமீ பரப்பளவு  கொண்ட ஊரில்  பரப்பளவை வைத்துப் பார்த்தால் ஆசியாவின் அதிக  பட்சமான  பெட்ரோல் பங்குகள், அதிக பட்சமான டாஸ்மாக் கடைகள், அதிக பட்ச இரட்டை வாகன ஊர்திகள்,மற்றும் அதிக பட்சமான அந்நிய செலவாணி  ரூ 15,000 கோடி.  சாயப் பட்டறை பிரச்சினையை வைத்துப் பார்த்தால் பின்னலாடை ஏற்ருமதியில்   அது எந்த  வகையில் திருப்பு முனையாக இருக்கும் என்பது சீக்கிரம்   தெரிந்துவிடும்.என்கிறார்.  ====================================================================

தாண்டவ்க்கோன்   : thandavakon , tiruppur

thandavakkon@hotmail.com

Series Navigation2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை
author

தாண்டவக்கோன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *