திண்ணை கட்டுரை எதிரொலி: இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் கட்டப்படுகிறது

This entry is part 2 of 34 in the series 17 ஜூலை 2011

ஆரூர் ஔரங்கசீப் கருணாநிதியின் இந்து விரோத ஆட்சியின் போது, இந்து வெறுப்பியல் காரணமாக நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்கள் சட்ட விரோதமாக இடித்துத் தள்ளப்பட்டன. அது பற்றித் திண்ணை (5 ஜூன் 2011 ) இதழில், “கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?” (http://puthu.thinnai.com/?p=890) என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். கருணாநிதியின் தீவிர ஆதரவாளர் இல. கணேசனின் தலையீடு காரணமாக இந்து இயக்கங்கள் அந்தப் பாதகச் செயலைக் கண்டித்துப் பெரிய அளவில் போராடாமல் இருந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில், புதிய சட்டசபை வளாகம் கட்டுகிறோம் என்ற போர்வையில் அங்கிருந்த ஆலமர இயற்கை விநாயகர் ஆலயம் தகர்த்துத் தரைமட்டமாக்கப்பட்டது பற்றியும் எழுதியிருந்தேன். ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு, கருணாநிதியால் நயவஞ்சகமாக இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் இந்தக் கோரிக்கையை இந்து இயக்கங்கள் எழுப்பவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்து நலன்கள் பற்றித் தமிழக இந்து இயக்கங்களுக்கு உண்மையிலேயே எந்த அக்கறையும் இல்லை என்பதையே இத்தகைய போக்கு மறுபடியும் நிரூபிக்கிறது. “ஓம் பூர் புவ ஸுவஹ…” என்று நீட்டி முழக்கி 1008 காயத்ரி மந்திரம் ஓதுதல், பிற ஜப தபங்கள், பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவது போன்றவற்றையே இராம. கோபாலன், சூரிய நாராயண ராவ் போன்ற தமிழக இந்து இயக்கங்களின் மூத்த தலைவர்கள் முக்கியமாகக் கருதுகின்றனரே தவிர இந்து நலன்களைப் பாதுகாக்கும் விதத்தில் அவர்கள் இப்போது எதையுமே செய்வதில்லை

திண்ணை வாசக அன்பர்கள் சிலர், தமிழக அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு சண்முகநாதன் நாடாரின் கவனத்துக்கு இக்கட்டுரையைக் கொண்டு சென்றனர். அறநிலையத் துறை அமைச்சரின் மூலம் தமிழக முதல்வரின் கவனத்துக்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.

கருணாநிதியால் இடிக்கப்பட்ட இயற்கை விநாயகர் ஆலயம் ரூ. 18.5 லட்சம் செலவில் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று ஜூன் 11, 2011 அன்று வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பின் மூலம் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், புதிதாகக் கட்டப்படும் கோயில் வளாகத்திலேயே, முன்னர் இருந்த 23 பரிவார தேவதைகளும் பிரதிஷ்டை செய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையைச் சகித்துக் கொள்ள முடியாத இந்து துவேஷி கருணாநிதி, ஏதோ ஆல மரத்து விநாயகருக்கு திடீரென்று அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என்று கேலி செய்திருக்கிறார். முழுப் பூசனியைச் சோற்றுப் பருக்கைகளால் மறைக்க முயல்வது போல, அந்தக் கோயில் தன் ஆட்சியில்தான் இடிக்கப்பட்டது என்ற உண்மையையே மறைக்கப் பார்க்கிறார்.

திண்ணை கட்டுரையின் எதிரொலியாகவே தமிழக அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்பது மகிழ்ச்சி தருகிறது. கருணாநிதியால் இடிக்கப்பட்ட விநாயகர் ஆலயத்தைப் புனரமைக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும், அறநிலையத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஆரூர் ஔரங்கசீப்பின் ஆட்சியில் இடிக்கப்பட்ட இந்து ஆலயங்கள் அனைத்தும் உடனடியாகக் கட்டப்பட வேண்டும் என்றும் கோருகிறேன்.

Series Navigationகரியமிலப்பூக்கள்விபத்து தந்த வெகுமதி
author

பா. ரெங்கதுரை

Similar Posts

5 Comments

  1. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ ரெங்கதுரை,
    முதலில் தங்களுக்கும் திண்ணைக்கும்தான் ஹிந்துக்களாகிய நாங்கள் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். கட்டுரையில் ஹிந்து அமைப்புகளின் முதிய தலைவர்களைப் பற்றித் தாங்கள் தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் சரியே.
    செயல்படத் துடிக்கும் இளைய தலைமுறையினர் தலைமைப்
    பொறுப்பை ஏற்க இவர்கள் இடைஞ்சலாகவும் உள்ளனர். பதவியில் இல்லையெனில் முக்கியத்துவம் இழந்துவிடுவோம் என்று அஞ்சும் அளவிற்கு இவர்கள் தன்னம்பிக்கையற்ற வர்களாகவும் தங்கள் திறமையில் சந்தேகம் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
    என்ன செய்வது, தனி நபர்களாக இருந்துதான் அவரவரும் அவரவர்களால் இயன்றதைச் செய்துவர வேண்டியுள்ளது. உங்களைப் போலவே. மீண்டும் நன்றியுடன்,
    -மலர்மன்னன்

  2. Avatar
    A. Namadeyan says:

    ராம கோபாலனையும் சூர்யநாராயண ராவையும் அவ்வளவு சுலபமாகப் புறம் தள்ளிவிடமுடியாது. தியாகசீலர்கள். ஆரூர் அவுரங்கசீப் கொடுங்கோல் ஆட்சியில் நெருப்பை a யவிடாது

  3. Avatar
    raman says:

    இன்னும் எத்தனை காலம் தான் மத வெறி பிடித்து அலைய்வீர்களோ 20 ம் நூறாண்டில் தான் இருக்கிறர்கள? இந்த காட்டுமிராண்டிகள்

  4. Avatar
    Hindu says:

    இந்துக்கள் ஒன்றைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அது மனோபலத்துடன் கூடிய சரீர பலம். இது இல்லாவிடில் பிறர் இந்துக்களை எள்ளி நகையாடல் தவிர்க்க முடியாது. ஜாதி வாரியாக பிரிந்து தம் தாய்த் தன்மையை மறந்ததாலேயே இந்நிலமை நமக்கு. பிற மதத்தினரை அன்புடன் அரவணைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தம் மதத்தை காப்பதும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: என்கிறது சமஸ்க்ருதம். இந்துக்கள் சகிப்புத்தன்மை, பெருந்தன்மை என்கிற போர்வையை தம் மீது போர்த்திக்கொண்டு எருமை மீது மழை பெய்தாற்போல பேசாமலிருக்கிறார்கள் (வார்த்தைக் கடுமைக்கு மன்னிக்கவும்). ஒரு கிறிஸ்தவரையோ, இஸ்லாமியரையோ அவர்தம் மதத்தை யார் இழிவு படுத்தினாலும் (கருணாநிதிக்கு அந்த தில் கிடையாது, கழட்டி விடுவார்கள் என்று நன்றாகத் தெரியும்) அவர்கள் பொங்கி எழுவார்கள். ஆனால் இந்து ஒரு தடித்த தோலன். பேசாமலிருப்பான். மேலும் வடிவேலு பாணியில் ‘ரொம்ப நல்லவன், எவ்வளவு திட்டினாலும் அடிச்சாலும் தாங்குவான்’. காஷ்மீர பண்டிட்டில் தொடங்கி, சோமநாதர் ஆலயம் தொட்டு இந்தியா முழுவதும் அவனை அடித்துக் கொண்டே இருக்கிறார்கள், அவனும் சகிப்புத்தன்மையுடன் தன் எருமைத்தோலை சுரண்டியவாறே சாஸ்திரம் பேசிக்கொண்டிருக்கிறான். ஆனால் இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்றே சொல்லவேண்டும். போய் பரசுராமரையும் விஸ்வாமித்திரரையும் விவேகானந்தரையும் தொழுங்கள். மூன்றாம் முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோவம் வரும் என்பது பழமொழி.

  5. Avatar
    பறையரசு says:

    ஓமந்தூரார் தோட்டம் என்பது அரசு இருப்பிடம். அரசு ஊழியர்கள் முன்பு இருந்தனர்.

    ஒரு விநாயகர் கோயில் இருந்தது. இப்போது அது புணரமைக்கப்படுகிறது அரசு செலவில். அரசுப்பணம் என்பது அனைத்து மத மக்களின் வரிப்பணமே.

    மதம் சாரா அரசு எனில், ஓமந்தூரார் தோட்டத்தில் ஒரு இந்துக்கோயில் கட்டியது போல, ஒரு மசூதி, ஒரு தேவாலயம் அரசு தன் செலவில் கட்டிக்கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இது என்ன மதம் சாரா அரசு? இந்துக்களுக்கு மட்டுமா அரசு ?

    அரசு கட்டிக்கொடுக்கவியலாவிட்டால் அம்மத்ததினரே கட்டிக்கொடுக்கத் தயார். அவர்கள் இந்துக்களைப்போல அரசிடம் கையேந்துவதில்லை.

    அரசு கவனிக்குமா ? எல்லா மதங்களையும் ஊக்குவிக்கவேண்டும். இந்து மதத்தை மட்டுமில்லாமல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *