சபா தயாபரன்
வாசலில்; அம்மா புதிதாக நட்ட செவ்வரத்தம் மரத்தில் இரண்டு பெரிய செவ்வரத்தம் மலர்கள் கொஞ்சிக் குலவியபடி இருந்தன..பனிக்கு மதாளித்து வளர்ந்து , பச்சை இலையில்; வெள்ளை புள்ளி வைத்த குரோட்டன் இலைகள் , மஞ்சள் வெயிலில் வண்ணம் காட்டி நின்றன அவற்றின் அடியில் துளிர்த்து நின்ற பனித் துளிகளை கைகளினால் உதறி விடுகையில் ஐpல் என்று குளிர்ந்தது.அம்மா ஞாபகம் ஷாந்தனுக்கு சின்னவனாய் இருக்கையில் முழுகிவிட்டு வரும் இவனை அம்மா கைகளினால் கோதி விடுவாள் அப்Nபுhது முகத்தில் நீர்த் துளிகள பட்டு ஐpல் என்று குளிருமே அப்படி
மாமரக் கிழையிலி;ருந்து வழமையாக கூவும் குயிலின் இனிய சப்தம். இளம் காலை நேர மஞ்சள் வெயிலுக்கு பறந்து சென்ற காகம் கண்ணைக்கூசி பளபளப்பாக இருந்தது. அவசரம் அவசரமாக கீச்சிட்டபடி புறந்து செல்லும் அந்த ஒரு சிட்டுக் குருவி தன் காதலனை அல்லது காதலியைத் தேடித்தான் போகவேண்டும்.அப்படி என்ன அவசரமோ தெரியவில்லை காகத்தின் தாக்குதலை முறியடித்தபடி அணில் ஒன்று கத்தியபடி தப்பித்து மரக்கிளையில் தாவி ஓடியது..பக்கத்து வீட்டு சரஸ் அன்ரியின் மகள் உதிர்ந்து கிடக்கும் பவளமல்லிகை மலர்களை அமைதியாக பொறுக்கிக் கொண்டிருந்தாள்.காலை நிற வெயிலுக்கு அந்த சின்னஞ் சிறுசின் தலைமுடி பொன் போல மினுங்கியது.
ஷாந்தனைக் கண்டு காலைவணக்கம் சொல்லியபடி தன் வேலையில் மும்முரத்துடன்..
இன்றைய காலை வழமையை விட மிகவும் இனிமையாக விடிந்ததாகவே ஷாந்தன் நினைத்துக் கொண்டான் .அக்கா சுடச்சுட கோப்பியை தந்து விட்டு போனாள்.ரிவியில் விளம்பரத்தைப் பார்த்த பிறகு அக்கா இந்த கோப்பியைத்தான் பாவிக்கிறாள.;ரிவி விளம்பரத்தைப் பார்க்க அக்கா போடும் கோப்பி நன்றாகவே இருக்கிறது.;.நாற்பது வயதிற்குப் பிறகு சீனி சாப்பிட்டால் டயபற்றிக் வரும் தம்பி என்று சொல்வாள். அருமைநாயகம் மாஸ்டர் சொல்லித் தந்த இரசாயனச்சமன்பாடுகளைப் Nபுhல அக்காவின் எச்சரிக்கையும் அடிக்கடி மறந்துதான் போகிறது.
கோப்பியை ஒரு மிடறு விழுங்கி அனுபவித்துக் குடிக்கையில் கேற்றடியில் பாலாண்ணனின் முகம் .என்ன இவர் இந்த காலை நேரத்தில் …….. அவசரமும் பதட்டத்துடனும்…..சோகத்தில் முகம் உப்பி…கண் கலங்கி . ஷாந்தனுக்கு மனதில் ஒரு வெறுமை…….இந்த மலர்கள்…பச்சை குரோட்டன்கள்… வெயில் ,காகம், குருவி , பவளமல்லிகை ஏன் இந்த கோப்பியின் ருசி இவைகளை ரசிக்கக் கூடிய மனநிலையில் அவர் இல்லை என்று மட்டும் புரிந்தது. இனிய காலை நேரத்தைக் கெடுபதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு வந்தவர் போல……இவனுக்கு அவர் மேல் ஒரு கோபமும் அதே சமயம், அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தோஷமான காலையை இழக்கப்போவதில் ஏற்படுகின்ற கவலையை விலக்க முடியாதவனாக இவன்.
இவன் அனுபவித்தபடி இருக்கும் இந்த காலையின் சந்தோஷத்தையும் கெடுக்க வந்த வில்லனாக அவரைக் கற்பனைப்படுத்திக் கொண்டான்;…
“ யாரங்கே இந்த சந்தோஷத்தைக் கெடுக்க வந்த இவருக்கு சாட்டையடி கொடுங்களேன்”;
“தம்பி அம்மா எங்க ?
“ஏன் அண்ணன் என்ன விசயம் “
“சிவம் அங்கிள்…… சிவம் அங்கிள்….நாக்குகள் பின்னிக் கொண்டபடி உளறியபடி….
ஏன்னண்ணன் சிவம் அங்கிளுக்கு என்னவாம் ?
“தம்பி சிவம் அங்கிள் செத்துப் போயிற்றார்ரா”
நாக்குகள் விடுபட்டு வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வெளியே வந்தன
நீண்ட நாளைக்குப ;பிறகு சிவம் அங்கிளின மீள் நினைவு.
இவன் மௌனம் காப்பதைக் கண்டு பாலாண்ணனுக்கு கோவம் வந்திருக்க வேண்டும்.
நான் அம்மாவக் கேக்கிறன் நீ என்ன ” கேட்ட புhலாண்ணனை முந்திக் கொண்டு இவன் சொன்னான்
“அம்மா உள்ளதான் இருக்கா”
இந்த செய்தி இவனிலும் பல இரசாயன பௌதிக மாற்றங்களை ஏற்படுத்தும் என்று வந்த அவர் முகத்தில ஒரு ஏமாற்றம.இவனை விசித்திரமாக ஒரு விஷ ஜந்துவைப் போல பார்த்தபடி உள்ளே சென்றார்.
அம்மா கேள்விப்பட்டதும் பெருங் குரலெடுத்து அழத் தொடங்கி விட்டாள்
“தம்பி சிவம் அங்கிள் செத்துப் போயிற்றாராம் மகன்”
அம்மாவைப்பார்க்க இவனுக்கு பாவமாக இருந்தது.
பாலாண்ணன் இன்னும் சோகமாக காடசியளித்தார் .சிவம் அங்கிள் கடைசியாக அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த போது கொடுத்த ரவுசருக்கும், சேர்ட்டுக்கும் நன்றிக்கடனாக இதையும் விட எந்த பாத்திரத்தையும் ஏற்க முடியாதுதான்.இவனைக் கண்டதும் அவர் முகத்தில் ஒரு திருப்தி. அம்மாவையும் அழ வைத்து தன் சோகப் பாத்திரத்திற்கு ஒரு துணைப்பாத்திரம் கிடைத்த திருப்தி
சிவம் அங்கிள் அம்மாவின் ஒன்று விட்ட தம்பி. அம்மாவின் அப்பாவும் சிவம் அங்கிளின் அப்பாவும் கூடப்பிறந்தவர்கள்.
அன்றுதான் முதன் முதலாக சிவம் அங்கிளை சந்தித்ததாக நினைத்துக் கொள்வான்.
இரசம் வழுந்த கண்ணாடியில் முகம் மங்கல் மங்கலாக தெரிவது போல நினைவுகளும் மங்கலாக………
அன்று வந்த சிவம் அங்கிள் இவனைக்கூப்பிட இவன் அக்காவின் பின்னால் மறைந்து மறைந்து நின்றிருந்தான்.அக்கா வலுக்கட்டயமாக இவனை இழுத்து வந்து சிவம் அங்கிள் முன்னால் நிறுத்தினாள்.இவன் வெட்கத்தினால் முகத்தைப் பொத்த காற்சட்டை பிடித்திருந்த கையை எடுத்தபோது காற்சட்டை இடுப்பிலிருந்து நழுவி இவன் நிர்வாணமாகநிற்க பின்பு அவரே சிரித்தபடி காற்சட்டையை மாட்டிவிட்டது இவனுக்கு மறக்கமுடியாத ஞாபகம்.
அம்மாவிற்கு சிவம் அங்கிள் என்றால் உயிர்.
ஆக்கா அக்கா என்று கூப்பிட்டு அவர் ஒவ்வொரு முறையும் பேசும் போது அவரின் பினபுறம் படியாத முள்ளுப்Nபுhல துருத்திக கொண்டிருக்கும் அவரின் முடியை பார்த்து ரசிப்பது இவன் வழக்கம். சிவம் அங்கிள் வந்தால் எப்படியும் ஒரு வேளை சாப்பாடு கொடுத்ததுத்தான் அம்மா அனுப்புவாள்
அம்மா பழைய நினைவுகள் கிளர்ந்தெழும்போது சொல்வாள்
ஏனக்கு தம்பி இல்லாத குறை சிவத்தினால்தான் இல்லாமல் போயிற்று மகன்.கூடப்பிறக்காட்டியும் அக்கா அக்கா என்று ……..அவன் என்ட சொந்தத் தம்பி போலத்தான்” அப’போதெல்லாம் அம்மா பாசத்தினால நெகிழ்ந்தபடி சொல்வாள்.
சுpவம் அங்கிளுக்கு இடியப்பமும் சொதியும் என்றூல் நல்ல விருப்பம்.அம்மா அவிக்கும் இடியப்பம் மெது மெது வென்று பஞ்சு போல இருக்கும். ஆவிபறக்கும் இடியப்பத்ததை தக்காளிப்பழ சொதியுடன் பிசைந்து ருசிக்க ருசிக்க சாப்பிடும் போது அம்மாவின் சமையலை புகழ்ந்து தள்ளுவா .அம்மாவைப் பாhக்க ஷாந்தனுக்கு சந்தோசமாக இருக்கும்.
இவனுக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு ஆசை இருந்தது. சின்னண்னைக் கூட்டிக் கொண்டு ஐஸ் கிறீம் வாங்கிக் கொடுத்துதைப் போல தனக்கும் வாங்கித் தர வேண்டும் என்று அது கடைசி வரை நிறை வேறவில்லை.
சுpவம் அங்கிளுக்கு முதன் முதவாக வேலை கிடைத்தபோது அம்மா சொன்னாள் “ தம்பி உனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று திரௌபதை அம்மாளுக்கு நேர்த்திக் கடன் வைத்தனான் பொங்க வேண்டும்.சிவம்; அங்கிள் சிரித்தபடி ஒன்றும் Nபுசாமல் இருந்தது ஷாந்தனுக்கு அவர் மேல் கோபத்தை ஏற்படுத்தியிருந்துது.
ஆதல் சம்பளத்தில் தன்னோடு வேலை செய்பவர்களுக்கு பெரியவிருந்து கொடுத்ததாக அம்மாவிடம் சொல்லி பெருமைப்பட்ட போது அக்கா வெடித்தாள்.
“ஓரு சொக்லேட் லாங்கித்தர ஏலா நீங்கதான் தம்பி தம்பி என்று சாகிறீங்க“
அம்மா சமாளித்தாள்
“போ மனே அவன் எவ்வளவு நம்மில அன்பாக இருக்கிறான் . இதப்பபோய் பெரிசு படுத்தியபடி” அம்மா சமாளிக்கிறாள் என்று அக்காவிற்கு விளங்கியது. அக்கா ஒன்றும் பேசவில்லை.
சுpவம் அங்கிளுக்கு அவுஸ்திரேலியா போக விசா வந்து விட்டது .சொல்ல வீட்டுக்கு வந்திருந்தார் விடயம் கேள்விப்பட்டதும் அம்மா அழத் தொடங்கிவிட்டாள்.சிவம் அங்கிளும் கண் கலங்கியதாக ஞாபகம். அதைப்பார்க்க இவனுக்கும் கண் கலங்கியிருந்தது.
“அக்கா ஏதும் உதவிகள் தேவைப்பட்டால் கேளுங்க”
அம்மா சொன்னாள்.
“கடவுளே என்று எனக்கு ஒரு உதவியும் தேவையில்ல தம்பி .நீ சந்தோஷமாக இருந்தா போதும்.”
“ஏன்ன மகன் நடந்தது” அம்மா அழுகையினூடே பாலா அண்ணனைக் கேட்டார்.
“கார் அக்ஸிடன்ரில செத்தவராம்.நடந்து ஒரு கிழமையாகிவிட்டதாம்.வைவ் தப்பிட்டாவாம்.”புhலாண்ணன் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தபடி விவரித்தபடி சொல்லிக் கொண்டிருந்தார். இடைக்கிடை கண்களைக் கசக்கி விட்டு மூக்கைச் சீறி விட்டுக் கொண்டிருந்தார்.
“இப்படி எதிர்பார்க்ல்லம்மா. சே! நல்ல மனிசனுகளுக்கு இப்படித்தான்.”
இது புhலாண்ணனின் லொஐpக் இல்லாத பேச்சு என்று இவனுக்கு புரிந்தது.
யாரு தம்பி இப்படி நினைச்சா ? அவன் கடைசியாக வந்து போனது இன்றும் என்ட கண்ணுக்குள்ள “
அம்மா எதைச் சொல்கிறாள்? அம்மாவிற்கு இதெல்லாம் எப்படி மறக்க முடிகிறது?
சிவம் அங்கிள் அவுஸ்திரேலியாவிலிருந்து அன்றுதான் வந்திருந்தார். ஷாந்தன்தான் முதன் முதலில் கண்டவன்.சிவப்பு நிற ரோயாட்டா காரில் சிவம் அங்கிளுக்கு பக்கத்தில் ஒரு வெள்ளைக்கார பெண் இருந்தாள் .இவனைக் கடந்து வாள்மாத்திர சந்தியில் அந்த கார் திரும்பிப் போயிருந்தது.
அம்மாவிடம் அவரைக் கண்டதை சொன்னபோது அம்மா சந்தோஷப்பட்டாள் .5வருஷத்திற்குப் பிறகு அம்மா அவரைப்பார்க்க போகிறாள்.அப்போது இவன் வீடு இப்படி புதுப்பிக்கப் பட்டிருக்;;கவில்லை.முன்பக்கம் கிடுகினால் மேயப்பட்டு பின்புற அறைகள் நாட்டு ஓடுகளால் மேயப்பட்டிருந்தது.அப்போதும் இந்த பாலா அண்ணன்தான் சிவம் அங்கிள் வந்த விடயத்தை வீட்ட வந்து சொல்லி பெரியம்மா வீட்ட பின்னேரம் வருவதாகவும் சொல்லி பெருமைப்பட்டார்.
பெரியம்மா வீட்டுக்கு வரும் சிவம் அங்கிள் வீட்ட வராமல் போகமாட்டார்.
ஷாந்தனின் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளியே பெரியம்மா வீடு இருந்தது.பெரியம்மா புது வீடு கட்டியிருந்தாள்; வீட்டுக்கு கரண்டும் எடுத்திருந்தாள் போர்ட்டிக்கோவில் வடிவான லைற் ஒன்று தொங்கும். வீட்டுக்கு மஞ்சள் கலர் அடித்து, மதிலுக்கு நீலக் கலர் அடித்து நின்ற பெரியம்மா புது வீட்டுக்கு முன்னால் சிவம் அங்கிள் ஓட்டி வந்த கார் இரண்டு மணி நேரமாக கம்பீரமாக நின்றிருந்தது.ஒவ்வொரு முறையும் இவன் வீட்டு தகர பேற் சத்தம் கேட்கும் போது ஷாந்தன் ஓடி வந்து பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம் சிவம் அங்கிள் வரவே இல்லை.
அம்மா அன்று அடைந்த ஏமாற்றத்திற்கு அளவே இல்லை.அதை வெளியில் காட்டிக்; கொள்ளாமல் மனதிற்குள் மூடி வைத்தபடி மௌனமாக அழுததை இவன் புரிந்து கொள்ளாமல் இல்லை. அவர் வீட்டிற்கு வராமல் அவரை சந்திக்க கூடாது எனற வைராக்கியமும் அம்மா மனதில் குடி கொண்டிருந்தது.. என்றாலும் மனம் கேட்காமல் பாலா அண்ணிடம் சொல்லி சிவம் அங்கிளை வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தாள். அவரும் வருவதாக பாலா அண்ணிடம் சொல்லி அனுப்பி இருந்தாள்.அம்மாவிற்கு சிவம் அங்கிள் மேலிருந்த சின்ன மனவருத்தமும் ஓடி மறைந்து விட்டது.
அன்று இரவு வீட்டில் தடபுடலான விருந்து.ஏற்பாடு. சிவம் அங்கிளுக்கு விருப்பமான இறால் சொதியும் இடியப்பமும் அம்மா சமைத்து வைத்திருந்தாள்.
“பிள்ளைகள் தம்பி வாற நேரம் முகத்தக் கழுவிட்டு சுத்தமாக இருங்க. ஊத்தச் சட்டையோட நிற்காம.”
அம்மா கூட வழக்கத்திற்கு மாறாக அன்று வொயில் சாரியில் தெரிந்தாள்.ஏழு மணிக்கு வருவதாக சொன்ன சிவம் அங்கிள் பத்து மணிவரை வரவில்லை.
அம்மா மனமுடைந்து போனாள்
ஆற்றாமையால் அம்மா அப்போது கண்கலங்கி சொன்னாள்
சுpவம் அங்கிளுக்கு இந்த வீடட் வாறதுக்கு வெடகமாக இருந்திருக்கும்.இந்த வீட்டுக்கு வர விருப்பமில்ல போல வெளிநாடு போனபிறகு இந்த அக்காவ மறந்து புது சொந்தங்களோடு பழகி… அம்மா கண்கலங்கி அழத் தொடங்கி விட்டாள்.
அந்த நிகழ்வு இவன் மனதில் ஆழமாக…….சிவம் அங்கிள் எங்கோ ஒரு தொலைவில்.
சுpவம் அங்கிளுக்காக செய்து வைத்திருந்த இடியப்பமும் சொதியையம் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு படுக்கப் போனான்.அம்மா இரவு சாப்பிடவில்லை.இம்மா இப்படித்தான் அதிக துக்கம் வந்தால் சாப்பிட மாட்டாள.;
“அம்மா சிவ சோதி அன்ரிட்டப போறதெண்டா அம்மாவும் வருகிறாவாம” பாலாண்ணன் குரல்;
சிவசோதி அன்ரி சிவம் அங்கிளின் மூத்த அக்கா.அம்மாவுடன் ஒனறாக படிப்பிக்கிறவர்.முன்பக்கம் மிதந்த பல்லுடன் அவர் சிரிக்கும்போது பார்க்க ஒரு மாதிரியாக இருக்கும்.அன்ரி ஒருநாள் வீட்ட வந்து கதைத்திருந்து போன பிறகு இவன’ அவர் சிரிப்பதைப் போல செய்து காட்ட அம்மாவுக்கு கோவம் வந்து முதுகில் இரண்டு போட்டாள்
சிவம் அங்கிள் வீட்டுக்கு வராததை அன்ரி அடுத்த நாள் ஸ்கூலில்அம்மாவிடம் சமாளித்தாள
“.இல்லக்h ரிக்கட’ விடயமாக யாரையோ சந்திக்கப் போயிருந்தவன் பிந்தித்தான் வந்தவன் உங்கட வீட்ட போகல்ல எண்டு சரியான கவலை அவனுக்கு.
சிவசோதி ரீச்சருடன் படிப்பிக்கும் கமலா ரீச்சரின் வீட்டில் சிவம் அங்கிளுக்கு அன்றிரவு விருந்து கொடுத்தது அம்மாவிற்கு தெரியும் என்று சிவசோதி அன்ரிக்கு தெரிந்திருக்கவில்லை.
இல்லாவிடில் இன்னொரு பொய்யை தயாராக வைத்திருந்திருப்பாள்
அம்மா ஒன்றும் பேசாமல் வந்ததாக சொன்னாள்.அம்மாவிற்கு இப்படியெல்லாம் எதிர்த்துப் பேச முடியாது.வீட்டிற்க்கு வந்து அக்காவிடம் சொல்லி கவலைப்பட்டள் “ சொந்தங்கள் நிலைத்து நிற்பதற்கும் காசுதான் முக்கியம ;நாம கொஞ்சம் வசதியாக இருந்தா உன்ட சிவம் அங்கிள் இஞ்ச வந்திருப்பான்”
சிவம் அங்கிளை உன்ட சிவம் அங்கிள் என்று அம்மா அழுத்திச் சொன்னது அம்மாவிலிருந்து சிவம் அங்கிள் அந்நியப்பட்டு நிற்பதாகவே இவனுக்கு பட்ட.து.
கடைசிவரைக்கும் சிவம் அங்கிள் அம்மாவைப்பார்க்க வராமலே அவுஸ்திரேலியா போய்விட்டார்.
விடயம் கேள்விப்பட்டு சாந்தக்கா,புவனாக்கா,சரஸக்கா எல்லோரும் வீட்டில் கூடிவிட்டனா.;பெரியம்மா மட்டும் கேற்றடியில் நின்று கொண்டாள். துன் காலடியில் ஒரு இஞ்சாவது உள்ளே படக்கூடாது என்ற அவதானத்துடன ;அப்பா ஒருமுறை குடித்துவிட்டு ஏச இந்த வளவுக்குள் வர மாட்டன் என்று மங்மகம்மா சபதம் போட்டு அதை இப்போதும் காப்பாற்றி வருகிறாள்.அம்பாவின் குணங்களிலிருந்து பெரியம்மா கொஞ்சம் வித்தியாசம் என்றாலும் .இவனுக்கு பெரியம்மாவைப் பிடிக்கும்
எல்லோரும் பெரிதாக ஒப்பாரி வைத்து அழத் தொடங்கிவிட்டனர்.அம்மாவையும் கட்டாயப்படுத்தி அழவைக்கிறார்களா? இவர்கள எல்லோருமே அழுவதில் நியாயம் இருக்கிறது.சிவம் அங்கிள் எல்லோர் வீட்டிலும் வந்து சொந்தம் கொண்டாடி .அன்புவைத்து பிரியாவிடை சொல்லித்தான் போயிருந்தார். நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடமைப்பாடு அவர்களுக்கு. அவர்கள் அழுவதில் நியாயமுண்டு. அப்படியிருக்க அம்மாவையும் இதில் சேர்த்து அழவகை;க என்ன யோக்கியதை இவர்களுக்குண்டு .சிவம் அங்கிள் வந்நபோது சந்தோசத்தில் பங்கு பற்ற அம்மாவை நினையாத இவர்கள் இந்த துக்கத்தில் மட்டும் கூட்டுச் சேர அம்மாவை அழைப்பது எந்த வகையில் நியாயம்?இவர்கள் நினைத்திருந்தாவ் ஒரு தடவையாவது சிவம் அங்கிளை கூட்டி வந்து காட்டியிருக்கலாம்.அம்மா அவரிடம் எதிர்பார்த்தது என்ன ஒரு அன்பை நேசத்தை பாசத்தைத்தானே எதிர்பார்த்தாள்? அதற்;கு அவருக்கு கிடைத்தவைகள் இந்த வேதனையும் ஏமாற்றமும்தானே. இந்த வாழநாள் ; முழுக்க அம்மாவிற்கு காயங்களை ஏற்படுத்தி வலிகளை ஏற்படுத்திக் கொண’டுதானே இருக்கின்றன ,அப்படியிருக்க ……
அம்மாவை இவர்கள் எல்லோரும் சேர்ந்து இன்னும் வேதனைப்படுத்துகிறார்கள் அம்மாவின் மன ஏக்கங்கள் விருப்புகள் பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை இதனை இன்னும் அனுமதிக்க முடியாது;.சிவம் அங்கிள் இறந்தது இவர்களுக்கு பொருளாதார ரீதியான நட்டமாகவும் இருக்கலாம் .அந்த காரணத்தை வெளியே வெளியே சொல்லாமல்; கூட அழலாம்.
அம்மாவின் அழுகைக்கும் இவர்களின் அழுகைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக இவன் உணர்ந்தான்
வர வர அழுகைக்குரல் பெரிதாக உயர்ந்து கொண்டே போனது
.இவனுக்குள் ரத்தம் சூடேறி உடம்பு நடுங்கி தவை விhரென்று…..அம்மா நீ அழக்கூடாது… அம்மா நீ அழக்கூடாது நீ வேதனைப்படுவதை என்னால் பொறுக்க முடியாது. கண்ணுக்குள் ஒன்று மின்னல்…எல்லாமே மங்கலாக…….இவன் தன்நிலை மறந்தான்
“இஞ்ச ஓருத்தரும் கத்த வேண்டாம்.எல்லோரும் வெளியே போங்க”
பெருங்குரலெடுத்து இவன் கத்தியபோது அழுகைக்குரல் அடங்கி ;.எல்லோரும் விக்கித்து நிற்க அவ்விடத்தில ஒரு மயான அமைதி நிலவியது.
அம்மா இவனை வெறித்துப் பார்த்தாள்
நீ ஒரு வக்கிரமானவண்டா என்பது போல அந்த பார்வை ..
sabathayaparan@gmail.com
- என் பாதையில் இல்லாத பயணம்
- புணர்ச்சி
- ஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்
- சின்னஞ்சிறிய இலைகள்..
- குற்றமுள்ள குக்கீகள் (cookies)
- 10 Day Solo Art Exhibition at Vinnyasa Premier Art Gallery, Chennai on September 1, 2011
- இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி
- புத்தன் பிணமாக கிடைத்தான்
- மாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா
- எங்கிலும் அவன் …
- முன்னறிவிப்பு
- (75) – நினைவுகளின் சுவட்டில்
- சிப்பியின் ரேகைகள்
- உரையாடல்.”-
- புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது
- தீர்ந்துபோகும் உலகம்:
- எங்கே போகிறோம்
- வாக்கிங்
- ஆர்வம்
- கதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- மொழிபெயர்ப்பு
- நாளை ?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4
- கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்
- நேயம்
- ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?
- மீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ
- உடைப்பு
- ஜென் ஒரு புரிதல் பகுதி 7
- வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்
- யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்
- காகிதத்தின் மீது கடல்
- இருப்பு!
- கூடியிருந்து குளிர்ந்தேலோ …
- நிலவின் வருத்தம்
- பொன்மாலைப்போழுதிலான
- தங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் !
- தமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு
- இந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….
- பேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)
- இயற்கை வாதிக்கிறது இப்படி……
- முனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930
- பஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்
- சமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)