“சாமி கும்பிடறேங்க”
*** *** ***
சாமி அம்மாசி கும்பிடறேங்க. குரலை உயர்த்தி கூப்பிட்டான்.
நன்கு வளர்ந்த உடல் .சதை திரண்ட கைகள் ,தொடைகள் , அகலகால்கள் அம்மாசி அருகில் நின்ற இளைஞன். “யேய் பெரிசு பாத்தியா .ரண்டு தரம் கூப்டியே ,திரும்பினாரா.அதா(ன்) இந்த எடதுக்கெல்லாம் வரமாட்டேன்குறேன்.
மூதி .சும்மா கிடடா .பெரிசா பேச ஆரம்பிச்சுட்டான் .இந்த கொழுப்பெடுத்ததனத்தை படிப்புலே காட்டமுடிலே.சாமி நாலு பேரோட பேசிட்டிருக்காரில்லே .ஒரு அஞ்சு நிமிசம் சவக்களையா
கிடந்தா என்ன கேடா?
முன் தாழ்வாரம் நீட்டப்பட்டு சிவப்பு காவி பூசப்பட்ட திண்ணை. அதே காவியில் செமென்ட் முதுகு திண்டு.அதில் சாய்ந்துகொண்டு ஐந்து பேருடன் பேசிக்கொண்டிருந்த அவர் காதில் முதல் குரலே விழுந்தாலும் பேச்சு தொடர்பு விடாமல் இருக்க பேசிவிட்டு “என்ன அம்மாசி, என்ன வேணும்?
சாமி பேராண்டிய அழைச்சிட்டு வந்திருக்கேன் .எதினாசசியும் வேலை வாங்கிகொடுக்கணும்.
பேராண்டி எதுவரைக்கும் படிச்சுருக்கான்?
பத்தாப்பு பாஸ் சையலிங்க .ரண்டு மூணு தபா படிச்சும் தேறலிங்க .உடம்பு கொழுத்தா படிப்பு ஏறுங்களா சாமி.
அரசாங்கத்துலே ஏதாவது வேலைக்கு மனு போடச்சொல்லேன்.
நீதான் சாமி எல்லாம்.இந்த மூதி ஒழுங்கா குப்பை கொட்டுமா.
என்ன பண்ணலாம்.
நீதான் சாமி மனசு வேக்கோணம்
பாப்போம்.
அப்படி சொல்லப்படாதுங்க சாமி.
சரி.சரி. பின்னாலே போயி சாப்டு போ..அம்மா கொட்டாரத்துலே இருக்காங்க.இரண்டு நாள் கழித்து உன் பேராண்டிய வரச்சொல். பாப்பம்.
இந்த ‘சாமி’ குடும்பம் பரம்பரை பரம்பரையா பணக்கார குடும்பம். சுதந்தர போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பம்.
சோசலிச அரசாங்கத்தின் முற்போக்கு திட்டங்களுக்கு தன்னுடைய நிலங்களை கொடுத்துக்கொண்டே வந்த குடும்பம்.அன்றிலிருந்து இன்று வரை இவர்கள் வீட்டிற்கு வராத அரசியல் தலைவர்களே கிடையாது. இவ்வளவு இருந்தும் அதை பயன்படுத்திக்காத குடும்பம்.
**** **** ****
டேய் தவிடா போநாயா?சாமி என்ன சொன்னாங்க?
யேய் பெரிசு இன்னொருவ்வாட்டி ஓஞ் சாமிய பத்திகேட்டே கோபம வரும்.பெரிய புடலலங்கா சாமி.மூணு தடவ போயிட்டு வந்தேன்.சாமி ஊரிலே இல்லையாம்.வர ஒரு வாரம் ஆகுமாம்.
இந்த வறட்டு கோபத்துக்கு கொறச்சல் இல்லே.
“யோவவ் அம்மாசி”.கொஞ்ச தூரத்திலே இருந்து குரல் கேட்கவே இருவரும் திரும்பிபார்த்தனர்.
ரோட்டில் வண்டிலே உட்கார்ந்து கொண்டு தங்கசாமி குரல் கொடுத்தான் .
என்னடாலே தங்கசாமி?
கிட்ட்டால வந்தாக்க என்னவாம்.
இருவரும் நெருங்க.உன் பேராண்டி தவிடனை நாயக்கரு அவருடைய லாரி செட்டுக்கு வரச் சொன்னாரு.
இவனுக்கு அங்கன என்ன வேலைட.
என்னைக் கேட்டா? நீ ஒன் பெராண்டிக்கு சாமிகிட்ட வேலைக்கு சொல்லி இருந்தயாம். .சாமி நாயக்கரு கிட்ட வேலைக்கு சொல்லி இருந்தராம் .சாமி நாயக்கரு கிட்ட சொன்னாராம் .அவனை போகச்சொல் .
டே பேராண்டி பாத்தியா என் போடலங்கா சாமிய. வேறு ஸோலி பாக்காம இப்பவே கிளம்புடா.
***** ***** *****
தவிடனை நாயக்கர் கண்கள் மேய்கின்றன. சாமி கணக்கு போட்டா தப்பாது.
ஏன்டாலே சாமிகிட்ட வேலைக்கு கேட்டியா?
ஏன்டாலேய அவன் ரசிக்கலே.
ஊமையா.
ஏன்டா மம்முட்டிய தூக்கி பொழைக்க வேண்டியதுதானே.
ஊமையாட்டம் இருந்தா எல்லாம் நடந்துடுமா. எலே இங்க பாரு சாமி ஒனக்கு லாரி ஓட்ட கத்துக் கொடுக்க சொல்லிருக்காரு.அவர் பாட்டு சொல்லிட்டு போயிடுவாரு .உனக்கு இஷ்டமா?
என்னடா பதில காணும்.
அவனால் நம்பமுடியலே. என்ன பதில் சொல்வது.தலைய ஆட்டினான்.
**** **** **** **** **** ****
நமஸ்காரம் சாமி.
வாங்க நாயக்கரே.
சாமி நா எதினாசசியும் தப்பு செஞ்சிருந்தா நேர்ல கூப்டு திட்டுங்க. உங்களுக்கு இல்லாத உரிமையா.
இதுவரைக்கும் ஒரு தப்பு தண்டாவுக்கும் போவாதவன்.மூணு லாரி ஓட்டறேன் .மூணு டிரைவரும் இதுவரைக்கும் கேசுன்னு மாட்டினதில்லே.சாமி எனக்கு புரியலே.அதான் கேக்குதேன். இந்தபயலுக்கு லாரி ஓட்ட கத்துக்குடுக்கனும்னு ஏன் சாமி உங்களுக்கு தோணிச்சி. அதுவும் என்னண்ட அனுப்பிச்சு ஏன் கத்துக்கொடுக்கணும்னு சொன்னீங்க.
பாத்திங்களா.இப்படி சிரிக்கிங்க.டேய் தவிடா ரைட்ல ஓடிடான்னா லெப்ட்ல ஓடிக்கறான்.பிரேக்கில கால போடுடான்ன ஆக்ஸ்சிலரேட்டர்ல போடறான்.நம்ம பசங்களுக்கு பயமா போயிடிச்சி .நானே வீல்ல உக்காந்துட்டேன்..தவிடன் அசந்துட்டான் .
முட்டில,போடனில போட்டேன் நாலுதரம். மொறைச்சு பார்த்தான் .என்னடா படவா மூறக்கிற..உன் பாட்டன் வீட்டு லாரியா இது.நான் சுயமா சம்பாரிச்சு வாங்கின லாரிடா ன்னு சொல்லி போட்டேன் இன்னொருதரம். மோறக்கிறயானு சொல்லி மறுபடியும் போட்டேன்.லாரி நேர ஓட ஆரம்பிச்சது.
சாமி, ஆனாலும் சொல்லுதேன் அவன கழனியில போட்டு வேலை வாங்கினாத்தான் நமக்கும் நல்லது ஊராருக்கும் நல்லது.நான் வரேன் சாமி.
இருங்க இருங்க.அவனுடைய முரட்டுக்குணத்துக்கு இப்படி பெண்டு எடுத்தாதான் சரிபட்டு வரும்.
அதனாலே தான் உங்ககிட்டே அனுப்பிச்சேன் .லாரி ஓட்ட கத்துக்கிட்டான்லே.இனிமே அவனை லோடு அடிக்க அனுப்ப வேண்டியதுதானே.
ஐயோ சாமி.ஆளை விடுங்க.நான் கிளம்பறேன்.
***** ***** ***** ***** ******
அண்ணே.அண்ணே. நிப்பாட்டுங்கண்ணே. நிப்….ஆற்று மணல எடுத்துக்கொண்டு சரிவிலிருந்து லாரி மேட்டில் ஏறிக்கொண்டிருந்தது. தவிடனுக்கு புரிவதற்குள் ஒரு கன்றுக்குட்டி உயிரை பறிகொடுத்திருந்தது .
ஏண்டா நாயே.ஒரக்க கத்தக்கூட்டாது.ம்.ம் சீக்கிரம் ஏறு.லாரி வேகமா நகரந்து இடது பக்கம் ஒடித்து வலது பக்கம் திரும்பி வேகம் எடுத்தது. கிளீனர் பையன் இதயம வெளியே வந்துவிடும்போல் சப்தம் போட்டது.
கவலை படாதே.ஒரு இருநூறு ஊத்தினா சரியா போய்டும்.லாரி வேகமாக ஓடிகொண்டிருந்தது.
***** ***** ****** ****** *****
விடியற்காலை மூன்று மணி.புதிதாக வளர்ந்து கொண்டிருந்த காலனி. வீடுகள் அங்கு மிங்குமா வந்து கொண்டிருந்தன. ரோடு சரியா அமையாத நிலை. வேகமா திரும்பிய லாரி ஒரு மூலை வீட்டின் காம்பவுண்ட் சுவரை பெயர்த்துகொண்டு நின்றது.
அண்ணே. வெளிச்சம் சரியா இல்லே. பாத்து போங்கண்ணே
பளார். தவிடன் கை கிளீனர் பையன் கன்னத்தில் விழுந்தது. ஏன்டா நாய் எனக்கா சொல்லித்தரே.
இன்னொருதரம் சொன்னே கொன்னேபோடுவன். இவன் தவிடனுடன் வேலை பார்த்த இரண்டாவது கிளீனர் பையன். மறுநாளி லிருந்து வேலைக்கு வரவில்லை.
***** ***** ***** ***** ***** ****
செங்கல்சுளை ஆள் வெளியே போனவன் திரும்ப நேரமாகிவிட்டதால் லோடு ஏத்துவது தாமதமாகி விட்டது.
முதலாளி “இன்னைக்கு லோடு அடிக்க வேண்டாம்னு சொல்லிட்டார். தவிடனுக்கு எரிச்சல். பைப்பாஸ் ரோட்டில் இருந்த சாராய கடைக்கு லாரிய திருப்பினான்.சரக்கு வேலை செய்ய ஆரம்பித்தது .எதிரில் வந்த வண்டிகள் கண்ணுக்கு பூச்சி காட்டி மறைந்தன.டமால்….எதிரில் வந்த வண்டி நொறுங்கி வண்டிக்காரன் கீழே விழுந்தான் .
***** ***** ***** ***** *****
சாமி. தவிடன் வண்டி மேல மோதிட்டான், வீட்டு காம்பவுண்ட் மேலே மோதிட்டான் …சாமி . சாமிக்கு தவிடனை பத்திய புகார்கள் வந்துகொண்டே இருந்தன. அம்மாசிக்கு ஆள் போயிற்று.
ஏன்டா அம்மாசி பேராண்டிக்கு வேலை வேணும்னு ஓடி வந்தே.இப்ப மறந்து போச்சா.
இல்லீங்க சாமி.
உன் பேராண்டி ஜெயிலுக்கு போகனும்னு ஆசைபடுறான் போலிருக்கு.லாரி ஓட்றானா இல்லே ……
சாமி சொல்றது புரிலீன்களே.
உன் பேராண்டிக்கு என்ன ஆச்சு.?
சாமி அவன் ரொம்பவும் மாறிட்டான். எதுத்து எதுத்து பேசுதான்.கேக்கா அடிக்க வர்றான். மருமவள அடிக்குதன்.உதைக்குதான்.அவன் புள்ளைய கூட கவனிக்க மாட்டேன்குதான். சில சமயம் அவன்டேர்ந்து வாசனை வருது.சில நா வீடு திரும்பதில்லே. டே சாமிக்கு தெரிஞ்சா வருத்த படுவார்னு சொன்னா அவரு பெரிய தொரயானு கேக்குதான்.
சரி அப்புறம் பாக்கலாம்.
சரியாக ஒரு வாரத்தில் தவிடனுக்கு வேலை போயிற்று.ஒரு லாரி சொந்தக்காரனும் அவனை வேலைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு மாதம் எல்லோரும் அவன் வாயில் அசிங்கமா விழுந்து போயினர்.
நேத்து நாயக்கர் சொன்ன சேதி. யாரோ துபாய்காரராம் .நிறைய லாரி ஓடுதாம்.அவர்டே வேலைக்கு சேர்திருக்கானாம் .
ஒ. அப்படியா நாயக்கரே. எங்கோ நன்னா இருந்தா சரி.
சாமிக்கு டவுன்லேர்ந்து அவனை பத்தி வந்த செய்திகள் ஒன்றும் நன்றாக இல்லை.துபாய் காரன் எவ்வளவு நாட்கள் இடுப்பில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பான்? எந்நேரமும் போலீஸ் தன் வீட்டுக்கதவை தட்டலாம் என்று சாமி நினைத்தார்.அன்று இரவு அவர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.போலீஸ் வந்துவிட்டதுன்னு எண்ணி கதவை திறந்த சாமியின் காலில் விழுந்தான் தவிடன்.
சாமீ…….அவன் அடிவயிற்றிலிருந்து குரல் எழும்பியது. சாமி நீங்கதான் காப்பாத்தணும் .
என்னடா தவிடா.பதறாம சொல்லு.
சாமி நீ தா காப்பாத்துணும் .
விவரத்த சொல்லுடா.
நான் லோடு அடிக்க போயிட்டேன். என் பொஞ்சாதி உள்ளே வேலயா இருக்கப்போ என் மவன் தெருவில விளையாடிட்டு இருந்திருக்கான். அப்போ வேகமா வந்த லாரி அவனை தூக்கிபோட்டு போயிடுத்து.என் பொஞ்சாதி மத்தவங்க எல்லாம் அவனை எடுத்திட்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு ஓடி இருக்காங்க. எனக்கு சேதி வந்து நானும் ஓடினேங்க. ரத்தம் கொடுத்திருக்காங்க.ரா பத்துமணிக்க்குள்ளாற நெலம தெளியலேன்ன எடுத்திட்டு போயிடனும்னு சொல்லிட்டாங்க. உடம்பு குலுங்க விழுந்து கிடக்கும் தவிடனை தட்டி எழுப்பினார். சாமி நீங்கதான் வரணும். நேர்ல வந்து நீங்க சொன்னாதான் பெரிய டாக்டோரங்க கேட்பாங்க.ரா நேரம் பாக்காம வந்து உதவுணும் சாமி.
கவலை படாதே தவிடா. சாமியின் கை தவிடனின் தலையை வருடியது. இரு வர்றேன். உள்ளே வந்த சாமியின் கை இரண்டு மூணு போன் நம்பர்களை தொடர்பு ண்டது.போனில் பேசியபின் சாமியின் முகம் இயல்பான நிலைக்கு வந்தது.
தவிடா கிளம்பு.ஆஸ்பத்திரிக்கு போவோம்.
****
- என் பாதையில் இல்லாத பயணம்
- புணர்ச்சி
- ஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்
- சின்னஞ்சிறிய இலைகள்..
- குற்றமுள்ள குக்கீகள் (cookies)
- 10 Day Solo Art Exhibition at Vinnyasa Premier Art Gallery, Chennai on September 1, 2011
- இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி
- புத்தன் பிணமாக கிடைத்தான்
- மாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா
- எங்கிலும் அவன் …
- முன்னறிவிப்பு
- (75) – நினைவுகளின் சுவட்டில்
- சிப்பியின் ரேகைகள்
- உரையாடல்.”-
- புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது
- தீர்ந்துபோகும் உலகம்:
- எங்கே போகிறோம்
- வாக்கிங்
- ஆர்வம்
- கதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- மொழிபெயர்ப்பு
- நாளை ?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4
- கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்
- நேயம்
- ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?
- மீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ
- உடைப்பு
- ஜென் ஒரு புரிதல் பகுதி 7
- வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்
- யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்
- காகிதத்தின் மீது கடல்
- இருப்பு!
- கூடியிருந்து குளிர்ந்தேலோ …
- நிலவின் வருத்தம்
- பொன்மாலைப்போழுதிலான
- தங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் !
- தமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு
- இந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….
- பேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)
- இயற்கை வாதிக்கிறது இப்படி……
- முனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930
- பஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்
- சமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)